பொதுவாக வெவ்வேறு நாகரிகங்களில் வாழும் மக்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் வினோதமாக தெரியும். ஆனால் பொதுவில் சீனர்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்கள் பார்வைக்கு படுபயங்கரமாக தோன்றும்.
Mooncake என்பது சீனர்களில் விரும்பி சாப்பிடப்படும் ஒரு வகை இனிப்பு. இந்த கேக் மூலமாக மோசடி நடந்துள்ளது சிங்கப்பூரில்.
சிங்கப்பூரில் உலவி வரும் இந்த புதிய வகை மோசடியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, முதலில் அவர்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் MoonCake விற்பனை குறித்த விளம்பரங்கள் வந்து சேரும்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த வகை உணவு அதிகம் விற்பனையாகும்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த போலியான செய்திகளை கண்டு ஏமாந்தவர்களை, மோசடிக் கும்பல் ஒரு ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டை (APK) பதிவிறக்க செய்ய வைக்கின்றனர்.
அதன் பிறகு அந்த கிட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம் திருப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !
சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் இதேபோல அறிய வகை துரியன் பழங்கள், செர்ரிகள் மற்றும் வாக்யு மாட்டிறைச்சி போன்ற
பருவகால உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்க முயன்ற போது, குறைந்தது 168 பேர் 20,000 சிங்கப்பூர் டாலர்களை ஏமார்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments