உலகில் பயன்படுத்தப்படும் நாணயங்களில், இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. ஆரம்பக் காலத்தில் பண்டமாற்று முறையில் மட்டும் தான் வணிகம் செய்யப்பட்டு வந்த நிலையில், மௌரிய பேரரசர் காலத்தில், வெளியிலான நாணயம் அறிமுகப் படுத்தப்பட்டது.
'வார்க்கப்பட்ட வெள்ளி' என்பதே, ரூபியாவின் பொருள். அதுவே காலப்போக்கில் 'ருபி' ஆக மாறி, 'ரூபாய்' ஆகத் தழுவியது. சிப்பாய் காலத்திற்குப் பின் தான் இந்தியாவில் ரூபாய் அதிகாரப் பூர்வமான பணமாக அறிவிக்கப் பட்டது.
1882-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால், முதல் முறையாகக் காகிதப் பணம் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து 19-ம் நூற்றாண்டில் வெள்ளி நாணயமும் இந்தியாவில் புழக்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியால், 1935ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது.
அப்போது, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டு 5 ரூபாய்த் தாளை ஆர்.பி.ஐ அதிகாரப் பூர்வமாக வெளியிட்டதுடன், சர்வதேச வளர்ச்சி கண்டது இந்தியப் பொருளாதாரம்.
விடுதலைக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்திய ரூபாய் 16 அணாக்களாக பிரிக்கப்பட்டு ஒரு அணாவின் மதிப்பு 4 பைசாக்களாகக் கணக்கிடப்பட்டது.
பின்பு, 1957ம் ஆண்டு 100 பைசாக்கள் ஒரு ரூபாய் என, பண மதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 1960களில் ஏற்பட்ட பண வீக்கம், இந்தியாவை நாணயங்கள் அச்சிடுவதில் சில சிக்கலை ஏற்படுத்தியது.
எனவே அப்போது அலுமினியத்தில் அச்சிடத் துவங்கினர். . 1970களில் எஃகால் ஆன 10 முதல் 50 பைசா வரையிலான நாணயங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன.
1954 முதல் 1978-ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் 5,000 மற்றும் 10,000 ரூபாய்த் தாள்களும் புழக்கத்தில் இருந்தன. அவை, பணவீக்கம் காரணமாக ஆர்.பி.ஐ.-ஆல் தடை செய்யப்பட்டது.
எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவி என்ன?
அதுவும், 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, 500 மற்றும் 1000 ரூபாய் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு, 500 ரூபாய் மற்றும் 2000 தாள்கள் மீண்டும் வெளியிடப்பட்டன. தற்போது இந்த தாள்கள் புழக்கத்தில் உள்ளன.
Thanks for Your Comments