ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவான அறிவுரையாக இருந்தது. ஆனால், 4,000 படிகள் போதுமானதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் பரிந்துரைத்தன.
எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் வி. மோகன் இது குறித்து பேசிய போது, முறையான நடைபயிற்சி மிகவும் முக்கியமானது.
தினமும் ஒரே நேரத்தில் நடப்பது நல்லது, அதனால் உடல் பழகி விடும். அது காலை அல்லது மாலை எந்த நேரமாக வேண்டுமானால் இருக்கலாம்.
அது ஒரு பொருட்டல்ல. ஒருவர் தனது உடல் தகுதி நிலைகள், வயது மற்றும் பிற நோய்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் நடைப் பயணத்தின் வேகத்தை தீர்மானிக்க முடியும்.
மண்டை ஓடு குவியலால் கட்டப்பட்ட கோபுரம்... மாயன் நரபலியா?
ஒருவர் முடிந்தவரை விறுவிறுப்பாக நடக்க வேண்டும். சுறுசுறுப்பான நடைப்பயிற்சி போதுமானதாக இருக்க வேண்டும் மற்றும் கிட்டத்தட்ட ஜாகிங் போன்ற பலன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால் கணுக்கால், முதுகு அல்லது இதயத்தில் காயம் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments