கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இதற்குள் 4 பிரபலங்களின் திருமணம் முடிந்து விட்டது. புகழ், மகாலட்சுமி, பாலாஜி மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரின் திருமணம் முடிந்து விட்டது.
இதில் சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனின் திருமணம் தான் மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான், இதை யாருமே எதிர்ப்பார்க்க வில்லை. அவர்கள் திருமணம் முடிந்ததில் இருந்து நிறைய ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட வைரலானது.
தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர் !
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.
இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப் படுத்தினார்.
அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார்.அது மட்டுமல்லாமல் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணத்தை வச்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர்.
வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !
அதை யெல்லாம் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது.
ஆம், தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி
16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் தற்போது அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் !
இதையடுத்து மகாலக்ஷ்மியின் ஆடம்பர வாழ்க்கை கேள்வி குறியாகி விட்டது. இந்நிலையில், இணைய தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி எந்த ஒரு பதிவையும் போடாமல் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்.
மேலும், சீரியலில் நடிக்கும் தோழியிடம் இவரு பக்கா பர்பெக்டா இருக்காருன்னு ஓவரா லவ் பண்னேன் இப்படி ஏமாத்திட்டாரரே என்று புலம்பி தள்ளி வருகிறாராம்.
Thanks for Your Comments