கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் இணைய தளத்தை பாதுகாக்கும் சில தகவல்களை தனியார் நிறுவனத்தினர் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மென்பொருள் மூலமாக இணைய தளத்தில் இருந்து தகவல்கள் திருடப் படுகிறதா? என்பதை இலவசமாக கண்டறியலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வாய் அறிகுறிகள் சொல்லும் உங்களுக்கு என்ன நோய் என்று?
தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில் முனைவோர்கள் பலரும் தங்களது தொழிலை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தங்கள் தொழிலுக்கு என தனியாக இணையதள பக்கத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.
இதன் விளைவாகவே இன்று குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தொடங்கி இயந்திரங்கள் வரை அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன.
இதனிடையே இணையத்தில் ஊடுருவும் ஹேக்கர்கள் தொழில் நிறுவனங்களின் தகவல்களை திருடுவதுடன் பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர்.
இதனிடையே தஞ்சையைச் சேர்ந்த சைபர் நெர்ட்ஸ் என்ற நிறுவனத்தினர் ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கி யுள்ளனர்.
சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?
இதன் மூலமாக இணையதளத்தை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்றும், இணையத்தில் இருந்து தகவல்கள் திருடப்படுகிறதா என்பதை இலவசமாக ஸ்கேன் செய்யும் வசதியும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments