எந்த துறைமுகத்திலும் நாம் அதிகப்படியான கண்டைனர்கள் இருப்பதைப் பார்த்துள்ளோம். உலக அளவில் நாம் பல நூற்றாண்டுகளாக வணிகம் செய்து வருகிறோம்.
ஆனால் 1956க்கும் பிறகு அந்த நிலைமாறியது. ஏனெனில் அந்த ஆண்டு தான் கண்டைனர்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
24 மணி நேரத்தில் ஒரு முழு கப்பலையும் பொருட்களால் நிரப்பும் வசதியை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது கண்டைனர்கள்.
உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள் என்றொரு பட்டியலை எடுத்தால் நிச்சயமாக கண்டைனர்களுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் ஆகும் செலவு கண்டைனர்கள் வந்த பிறகு 90% குறைந்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கண்டைனர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஒரு கப்பலில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பேக் செய்து ஒவ்வொரு அளவில் அனுப்பி வந்தனர்.
ஆனால் இப்போது எல்லாமே 20 அடி நீளம், 8 அடி அகலம் மற்றும் 8 அடி உயரமுடைய செவ்வக வடிவ பெட்டியில் இருப்பதால் கப்பலில் அடுக்குவதும் கிரேன் மூலம் இறக்குவதும் எளிது.
அமெரிக்க தொழிலதிபர் மால்கம் மெக்லீன் தான் முதன் முதலாக கண்டைனரை உருவாக்கியது. இவருக்கு கீத் டான்ட்லிங்கர் என்ற பொறியாளர் உதவினார். இன்று இது உலகை மாற்றும் கண்டிபிடிப்பாக மாறியுள்ளது.
ஐஸ்கிரீம், நூடுல்ஸ் மீன்களில் இருந்து தயாரிக்கப் படுகிறது !
இப்போது காலத்துக்கு ஏற்ப கண்டைனர்களும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் மென்பொருளகளைப் பயன்படுத்தி கண்டைனர்களைக் கண்காணிக்கின்றன.
உலகின் அபரிவிதமான வளர்ச்சியில் அமைதியாக தனது கடமையைச் செய்துள்ளது கண்டைனர்கள்.
Thanks for Your Comments