ஜவான் திரைப்படம், முதல் நாளே பாலிவுட் திரையுலகில் வசூலில் மிரட்டி உள்ளது. மேலும் ஹிந்தியில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் தொகை பற்றிய தகவலை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பல்வேறு இடைஞ்சல்கள் வந்த போதும், அனைத்தையும் தாண்டி ஒரு வழியாக ஜவான் படத்தை எடுத்து முடித்தார். இந்த படத்தை ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மென்ட் மூலம் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயின் பக்கவிளைவுகள் !
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர் பார்ப்புக்கு மத்தியில், நேற்று இந்த திரைப்படம் வெளியானது.
மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான, 'பதான்' திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்த நிலையில், 'ஜவான்' திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா? என எதிர் பார்க்கப்பட்ட நிலையில்,
முதல் நாளே 'ஜவான்' படத்தின் வெற்றியை உறுதி செய்தது ரசிகர்களின் கருத்துக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள்.
'ஜவான்' படம் ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது.
அதை போல், இந்த படத்தில் தமிழ் நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவரை தொடர்ந்து, பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
அதே போல் அனிருத் 'ஜவான்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்களை விட... BGM திரையரங்குகளை அதிர வைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தேங்காய் பாலில் என்ன மாதிரியான நன்மைகள் இருக்கிறது?
படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'ஜவான்' கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையும் என தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் ஹிந்தியில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சரித்திர சாதனையை 'ஜவான்' திரைப்படம் படைத்துள்ளது.
உலகம் முழுவதும் ஷாருக்கானுக்கு ரசிகர்கள் உள்ளதால்... எப்படியும் உலக அளவில் முதல் நாளே 175 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments