நண்பனின் இல்ல காதணி விழாவில் 500 கிலோ எடை மாலையுடன், ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக் கிடாய் சீர்வரிசை செய்த நண்பர்கள்.
மற்றும் ஆட்டு கிடாய் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கி தாங்களும் தாய்மாமன தான் என அப்பகுதி மக்களை ஆச்சரியப் படுத்தினர். மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு இல்ல விழாவானாலும் அதனை தனித்துவத்தோடு நடத்துவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் போட்டியே நடக்கும், அந்த வகையில் தாய்மாமன் சீர் வரிசைக்கு போட்டியாக நண்பர்கள் சீர்வரிசை செய்து அசத்தி யுள்ளனர்,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் லதா தம்பதியினர், இவர்களது குழந்தைகளான சாதனா ஸ்ரீ, சாய் சிவன் இருவருக்கும்
ஆனால் அவையெல்லாம் மிஞ்சும் வகையில் பால கிருஷ்ணனின் நண்பர்களான கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, அபுதாஹிர், மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட ஏழு பேரும் சேர்ந்து
பால கிருஷ்ணனின் குழந்தைகளுக்கு தாங்களும் தாய்மாமன்கள் தான் என நிரூபிக்கும் வகையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மேலும் பொய்க்கால் குதிரை, ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தாய்மாமன் சீர்வரிசை போல் சீர்வரிசையுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்த இவர்கள்
நண்பன் குடும்பத்தினருக்கு ராட்சத மாலை அணிவித்ததுடன் நண்பனுக்கு பண மாலையும் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே போல் அந்த மாலையிலும் மதுரையினா பாசம் இனிமேல் இந்த உறவை ஊரே பேசும் என்ற வாசகமும் எழுதப் பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்தும் கொடுக்கப்பட்டது.
Thanks for Your Comments