ஹெலிகாப்டர் வைத்துள்ள நகைக்கடை அதிபர்.. யார் தெரியுமா?

2 minute read
0

ரூ.178 கோடி மதிப்புள்ள ஜெட், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டருக்கு சொந்தகாரரான கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் டி.எஸ். கல்யாணராமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம். 

ஹெலிகாப்டர் வைத்துள்ள நகைக்கடை அதிபர்.. யார் தெரியுமா?
டி. எஸ். கல்யாணராமன் தனது 12 ஆவது வயதிலிருந்தே அவரது தந்தை யிடமிருந்து தொழில் பாடங்களை படிப்பதன் மூலமாக தனது தொழில் பயணத்தை துவங்கி விட்டார். 

தற்போது இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் -இன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக செயலாற்றி வருகிறார். 

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியே இருக்கக் கூடிய ஒரு சில நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்யாண் ஜுவல்லர்ஸ் முதன் முதலாக 1993 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூபாய் 8,407 கோடியாக உள்ளது.

டி. எஸ். கல்யாண ராமனுக்கு விலை உயர்ந்த கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் உண்டு. அவர் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் சீரிஸ் I மற்றும் இரண்டு பாந்தோம் சீரிஸ் II மாடல்கள் உட்பட 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார். 

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் காரின் விலை ₹ 10 கோடி. இந்த ஆடம்பர கார் 6.75 லிட்டர் V12 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது.

மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் தவிர கல்யாண ராமனிடம் ஒரு பிரைவேட் ஜெட் மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் உள்ளது.

வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இவர் 178 கோடி மதிப்புள்ள Embraer Legacy 650 பிரைவேட் விமானத்தின் ஓனர். அது மட்டும் அல்லாமல் கனடாவில் தயாரிக்கப்பட்ட பெல் 4207 ஹெலிகாப்டரின் சொந்தக்காரர் என்ற பெருமையையும் கல்யாண ராமன் பெற்றுள்ளார்.

அவர் வைத்திருக்கும் ஹெலிகாப்டரின் விலை ரூ.48 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings