பத்திரிக்கையாளர், சுட்டுக் கொல்லப்பட்ட அவலம்... யார் இவர்?

0

கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரான பி.லங்கேஷின் மகள் கௌரி லங்கேஷ். 1980ம் ஆண்டு ஊடகத்துறையில் பணியைத் தொடங்கினார். 2000ம் ஆண்டு அவரது தந்தை மரணத்துக்கு பிறகு பெங்களூரில் தங்கியிருந்து பாணியாற்றி வந்தார்.

பத்திரிக்கையாளர், சுட்டுக் கொல்லப்பட்ட அவலம்... யார் இவர்?
லங்கேஷ் பத்ரிகா என்ற பத்திரிக்கையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த பத்திரிகை எந்த விளம்பரமும் இல்லாமல் வாசகர் கட்டணத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் கௌரி லங்கேஷ் இடதுசாரியாக இருந்தார். பாஜகவினருக்கு எதிரான கருத்துக்களை தனது பத்திரிகை மற்றும் பிற செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தினார்.

இவர் செப்டம்வர் 5 2017 அன்று, இரவு 8 மணியளவில் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நெற்றி, மார்பு என 3 இடங்களில் குண்டு துளைத்திருந்தது.

ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?

இந்த வழக்கில் பரசுராம் வாக்மோர், பிரவீன் குமார், நவீன்குமார் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப் பட்டனர். 

இந்துத்துவ எதிர்ப்பாளராகச் செயல்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப் பட்டதைப் போன்றே கௌரி லங்கேஷ்சும் கொல்லப் பட்டுள்ளார்.

கௌரி லங்கேஷ் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள பரசுராம் வாக்மோர் தான் சுடப்போவது யார் எனத் தெரியாமலே சுட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

இந்து மதத்தைக் காக்க ஒரு பெண்ணை சுட வேண்டும் என்று மட்டுமே அவருக்கு அறிவுறுத்தப் பட்டதாக கூறியுள்ளார். இந்த வழக்கு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கௌரி லங்கேஷ் கர்நாடகாவில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்டம் உருவாக கரணமாக இருந்த பத்திரிகை யாளராவார்.

பத்திரிக்கையாளர், சுட்டுக் கொல்லப்பட்ட அவலம்... யார் இவர்?

இந்துதர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், நீதியற்ற, நியாயமற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்றுக் கூறி வந்தார்.

தலித் மக்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். நக்சலைட்டுகள் மனம் திருந்தி எளிய வாழ்க்கையை வாழ பல முயற்சிகளை மேற்கொண்டார். 

தூக்கத்தின் பலன் பற்றி தெரிந்து கொள்ள !

கௌரி லங்கேஷின் கொலை, கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டது. அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்த போதும் தனது பணிகளில் இருந்து சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து நேர்மையாக பணியாற்றி வந்தார்.

இவரது இறப்புக்கு நியாயம் கிடைக்கும் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings