கும்பகோணத்தில் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம் !

0

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பாமா சுப்ரமணியம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மருத்துவமனை மட்டுமின்றி நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

கும்பகோணத்தில் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம் !
இந்நிலையில் கார்த்திகேயனின் மருத்துவ மனையில் திருவிடைமருதூர் அருகே தோப்புத் தெருவைச் சேர்ந்த 22 வயதாகும் வைஷ்ணவி என்ற இளம் பெண், கடந்த ஆறு மாதங்களாக நர்ஸாக பணியாற்றி பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவ மனையில் உள்ள அறையில் வைஷ்ணவி திடீரன தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி போலீசாருக்கு மருத்துவமனை நிரவாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்கள். 

அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நர்ஸ் வைஷ்ணவியின் உடலை வந்த கைப்பற்றிய போலீசார், கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். 

அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நர்ஸ் வைஷ்ணவி சாவில் மர்மம் இருப்பதாகவும், இறந்த உடன் தங்களுக்கு முறையாக தகவலை தெரிவிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

உடலை பார்க்க கூட மருத்துவமனை தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. வைஷ்ணவி தூக்கில் தொங்கிய விதத்தில் சந்தேகம் இருக்கிறது. எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. 

எங்களால் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதை ஏற்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம் போலீஸார் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறி சமாதானம் செய்தனர். 

அதை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர். இதனிடையே நர்ஸ் வைஷ்ணவி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. 

இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உடனே தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து தற்கொலைஎண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். 

முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன? 

இதே போல் சினோகா தற்கொலை தடுப்பு மையத்தின் எண்ணிற்கும் அழையுங்கள்.

சினோகா தற்கொலை தடுப்பு மையம் - 044 -2464000 (24 hours)

தமிழக அரசின் தற்கொலை தடுப்பு மையம் - 104 (24 hours)

iCall தற்கொலை தடுப்பு எண் - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm)

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings