பேருந்தில் பயணித்த கும்ப்ளே... வேலை நிறுத்த போராட்டம் !

0

பெங்களூருவில் தனியார் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் இன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 

பேருந்தில் பயணித்த கும்ப்ளே... வேலை நிறுத்த போராட்டம் !
இந்திய அணியின் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்த மகளிருக்கு இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டமானது தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !

இதனால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், இலவச பேருந்து திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். 

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தனியார் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அணியின் பயிற்சி யாளருமான அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் பயணித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், விமான நிலையத்திலிருந்து இன்று வீடு திரும்பும் பெங்களூரு அரசுப்பேருந்து பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளும், 271 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளும் அனில் கும்ப்ளே கைப்பற்றி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings