தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் மிகச்சிறந்த நடிகருமான விஜய் ஆண்டனி தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது திரைத்துறை யினரிடமும் அன்பாக பழகும் சாந்த குணமுடையவர்.
இவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர் இதில் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரைத்துறையினர் மத்தியில் பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
மீரா கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதற்காக அவர் கடந்த 6 மாத காலமாக சிகிச்சை எடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
அவர் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவி, மிகவும் திறமையானவர், தைரியமானவர், மேடைகளில் தைரியமாக பேசக்கூடியவர். பல கலைகளில் தன்னை ஈடுபடுத்தி திறமைகளை வெளிப்படுத்தி யிருக்கிறார்.
இந்நிலையில் மீரா தன் குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட்டு விட்டு `11 மணிக்கு தூங்க சென்றுள்ளார். சரியாக 3 மணியளவில் அவர் தூக்கிட்டு இறந்துள்ளார்.
அந்த கடைசி இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது? அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என பல கோணங்களில் போலீசார் விசாரித்துள்ளனர்.
(getCard) #type=(post) #title=(You might Like)
பொதுவாக இது போன்ற மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் தற்கொலை செய்யும் முடிவில் இருக்கும் போது கடைசி நிமிடங்களில் அங்கும் இங்குமாக நடந்திருப்பார், மனம் குமுறி அழுதிருப்பார்.
தனக்கு பிடித்த நபர்களை விட்டு செல்வதை நினைந்து ஆழ்மனதில் வருந்திருப்பார்கள். எண்ணங்கள் நிலையாக இருந்திருக்காது. படபடப்பாக எண்ணத்துடன் ஒரு வித குழப்பத்தில் மரணித்திருப்பார்கள் என மனநல ஆலோசர்கள் கூறுகிறார்கள்.
Thanks for Your Comments