மீன் சாப்பிட்டதினால் கை கால்களை இழந்த பெண் !

0

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லாரா பராஜஸ் என்ற 40 வயது பெண்மணி, சான் ஜோஸில் உள்ள உள்ளூர் சந்தையில் வாங்கிய மீனை சமைத்து சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டார். 

மீன் சாப்பிட்டதினால் கை கால்களை இழந்த பெண் !
இதற்கு காரணம் அந்த மீனில் இருந்த 'விப்ரியோ வல்னிபிகஸ்' என்ற பாக்டீரியா என்று கூறப்படுகிறது. 

இதன் பிறகு, லாரா இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். 

வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !

மேலும் இவரது கை மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவர்களால் நீக்கப்பட்டது. இது குறித்து அவரது தோழி மெசினா கூறுகையில், இது மிக பயங்கரமானது. எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

இதனால் லாரா ஏறக்குறைய கோமா நிலைக்கு சென்று விட்டாள். அவளுடைய சிறுநீரங்கங்கள் செயலிழந்து விட்டன என்று கூறினார். 

இது குறித்து யூ சி எஸ் எப் தொற்று நோய் நிபுணர் நடாஷா கூறுகையில், அசுத்தமான ஒன்றை நீங்கள் சாப்பிட்டால், விப்ரியா வல்னிபிகஸ் பாக்டீரியாவால் பாதிக்கப் படுவீர்கள்.

மேலும் உங்களுக்கு ஏதும் காயம் இருந்தால், அது குணமாகும் வரை, நீரில் மூழ்குவது, நீச்சலடிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 

நோயெதிர்ப்பு சக்தி குறை பாடுள்ளவராக இருந்தால், அதிக ஆபத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings