நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பூ டிசைனில் புதிய சீருடை.. பெரும் சர்ச்சை !

0

வரும் 19ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், பணியாளர்கள் அனைவருக்கும் புதிய சீருடை கொடுக்கப் பட்டுள்ளதாகவும், 

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பூ டிசைனில் புதிய சீருடை.. பெரும் சர்ச்சை !
சட்டை மற்றும் பேண்ட் இரண்டிலும் சிறிய அளவிலான தாமரை பூ டிசைன் இடம் பெற்றுள்ளது என்றும் தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் கூட்டத்தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. 

இதனிடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் முதல் நாள், பழைய கட்டிடத்திலும், இரண்டாவது நாள் முதல் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. 

வாய் அறிகுறிகள் சொல்லும் உங்களுக்கு என்ன நோய் என்று?

அதாவது விநாயக சதுர்த்தியொட்டி செப்டம்பர் 19 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் மாற்றப்பட உள்ளதாம்.

அந்த வகையில் நாடாளுமன்ற பணியாளர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சீருடை அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசு சார்பில் சீருடைகள் வழங்கப் பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டுக்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து தற்போது சீருடைகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 

செப்டம்பர் 18ம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுவதை ஒட்டி நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய அரசு. 

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பூ டிசைனில் புதிய சீருடை.. பெரும் சர்ச்சை !

அந்த வகையில் புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள சீருடைகள் 271 பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. 

அந்த சீருடையில் சட்டை மற்றும் பேண்டில் தாமரை பூக்கள் டிசைனாக இடம் பெற்றுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தாமரைப் பூவானது இந்தியாவின் தேசிய மலர் என்றாலும் அது பாஜக கட்சியின் சின்னமாகவும் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி யுள்ளது. 

சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

மேலும் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் காவலர்கள் இதுவரை சபாரி சூட் அணிந்த நிலையில் இனி அவர்களுக்கு இந்திய பாரம்பரிய டிசைனை அடிப்படையாகக் கொண்ட குர்தா மற்றும் பைஜாமா சீருடையாக வழங்கப்பட உள்ளது. 

இதன் கூடவே மணிப்பூரின் தலைப்பாகையும் அவர்கள் அணிய உள்ளார்கள். மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இனி சஃபாரி உடைகளுக்கு பதிலாக ராணுவத்தினரை போன்ற உடைகளை அணிய இருக்கிறார்கள். 

இந்த உடைகள் அனைத்தும் புதிய பேஷன் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் வடிவமைத்துள்ளது. 

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பூ டிசைனில் புதிய சீருடை.. பெரும் சர்ச்சை !

இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பணியாளர்களின் உடையில் ஏன் பாஜகவின் சின்னமான தாமரை இடம் பெற வேண்டும். 

அதற்கு பதிலாக தேசிய விலங்கு புலியோ அல்லது தேசிய பறவையான மயிலு இடம் பெறவில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 

மனைவிகள் எதிர்பார்க்கும் விஷயம் !

அதோடு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சீருடை காக்கி நிறபேண்ட் இடம் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற பணியாளர்களின் சீருடையும் காக்கி நிறமா என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

இப்படி என் நாடாளுமன்ற பணியாளர்களின் சீருடையில் இன்றைய தாமரை இடம் பெற்று இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings