27 வருடமாக வாடகை வீட்டில் இருந்த குணசேகரன், இன்னும் சில மாதத்தில் சொந்த வீட்டில் குடியேற இருந்த நிலையில், உயிரிழந்துள்ள சோகம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
துணை இயக்குனராக கவனம் பெற்ற இயக்குனர் மாரிமுத்து, பின்னர் திரை உலகில் இயக்குனராகவும் அறிமுகமானார். இவரின் துரதிஷ்டம் இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்கள் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
எனினும் கண்ணும் கண்ணும் படத்தில் இடம் பெற்ற கிணத்த காணும் காமெடி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
சுவையான குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?
திரை உலகில் கிடைத்திராத அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். எதிர்நீச்சல் சீரியலில் ஆணாதிக்கம் கொண்ட ஒருவராக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் உண்மையில் இவர் பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுக்கும் நபராம். சீரியலில் 20 ஆயிரம் சம்பளத்தில் நடிக்க துவங்கி, தற்போது இந்த அதிக சம்பளம் வாங்கும் நபராக உயர்ந்துள்ளார் மாரிமுத்து.
மெல்ல மெல்ல தன்னுடைய ஏழ்மையை வென்று, முன்னணி இடத்தை நோக்கி முன்னேறியுள்ள மாரிமுத்து கடந்த 27 வருடமாக வாடகை வீட்டில் தான் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவருடைய கனவு என்பது சொந்த வீட்டில் தன்னுடைய குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்பது. சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சொந்த வீடு கனவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது திருமணம் ஆகி 27 ஆண்டுகளில்... பல வாடகை வீட்டில் வசித்துள்ளோம். ஆனால் இப்போது சொந்த வீடு கனவு நிஜமாகி யுள்ளது.
பொதுவாக வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் பெரும் கனவு என்பது சொந்த வீடு தான். அந்த கனவு தற்போது என் வாழ்வில் நிறைவேறி விட்டது.
விரைவில் அந்த வீட்டிற்கு செல்ல உள்ளோம் என்பதையும் தெரிவித்திருந்தார். இந்த வீட்டின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த வீட்டில் குடியேறவும் மாரிமுத்து முடிவு செய்திருந்தார்.
செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?
ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது. RIP.......
Thanks for Your Comments