மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்... ஹீரோ விஷாலா? எஸ்.ஜே.சூர்யா?

0

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகி யிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று வெளியாகி யுள்ளது. 

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்... ஹீரோ விஷாலா? எஸ்.ஜே.சூர்யா?
ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிற்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என பேர் போட்டு இருந்தார்கள். 

அதற்கு தான் முழுமையாக தகுதியானவன் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாக சொல்லி இருக்கிறார் சூர்யா.

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தத் திரைப்படம் வணிகரீதியாக ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

ஆனால் அதன் பிறகு வெளியான அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சறுக்கல் தான். தற்போது அவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி யுள்ளது.

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

முதல் காட்சியிலேயே விஞ்ஞானி சிரஞ்சீவியை (செல்வராகவன்) காட்டுகிறார்கள். டைம் டிராவல் செய்ய உதவும் செல்போனை கண்டு பிடிக்கிறார் சிரஞ்சீவி. 

அந்த செல்போன் மூலம் கடந்த காலத்திற்கு செல்ல முடியும். அந்த செல்போனை வைத்து யார் வேண்டுமானாலும் கடந்த காலத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேச முடியும். 

20 ஆண்டுகள் கழித்து 1995ம் ஆண்டு மார்க் (விஷால்) மற்றும் கொடூரமான கேங்ஸ்டரான ஜாக்கியை (எஸ்.ஜே.சூர்யா) பார்க்கிறோம். பயங்கரமான கேங்ஸ்டரான ஆண்டனியின் மகன் தான் மார்க்.

தன் நெருங்கிய நண்பரான ஆண்டனியின் மரணத்திற்காக பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கி. ஆண்டனியின் மகன் மார்க் வளர்ந்த பிறகு மெக்கானிக் ஆகிறார். 

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்... ஹீரோ விஷாலா? எஸ்.ஜே.சூர்யா?

ஜாக்கியின் மகன் மதன் பாண்டியோ (எஸ்.ஜே. சூர்யா) கேங்ஸ்டராக முயற்சி செய்கிறார். தன் அம்மாவின் மரணத்திற்கு அப்பா தான் காரணம் என நம்புகிறார் மார்க். 

ஆனால் தன் கராஜில் ஒரு டைம் மெஷினை பார்க்கும் போது மார்க்கின் வாழ்க்கை திசை மாறுகிறது. அந்த டைம் மெஷின் மூலம் தன் அப்பாவுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் பேசுகிறார் மார்க். 

அப்படி பேசிய பிறகே தன் அப்பா ஆண்டனி தான் நினைத்தது போன்றவர் இல்லை என்பது மார்க்கிற்கு தெரிய வருகிறது. பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் வைக்கப் பட்டிருந்த விஷயங்கள், தன் அப்பா பற்றி தெரிந்து கொள்கிறார் மார்க்.

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

கடந்த காலத்தில் நடந்த சில விஷயங்களை மாற்றி தன் அப்பாவை மீண்டும் உயிருடன் கொண்டு வருவாரா மார்க்?

லாஜிக் பார்க்காமல் சும்மா படம் பார்த்து ரசிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற படம் மார்க் ஆண்டனி. தன் அபார நடிப்பால் நம்மை இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

கதையில் எதுவும் புதுமை இல்லை. வழக்கமான கேங்ஸ்டர் டிராமா தான். ஆனால் அதை ஆதிக் ரவிச்சந்திரன் திரையில் காட்டிய விதம் தான் அருமை.

படம் துவங்கிய உடனே நம்மை அந்த உலகத்திற்குள் இழுத்து விடுகிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் சில காட்சிகள் வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. 

முக்கியமான காட்சியில் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்ததை பாராட்டியே ஆக வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி கண்டிப்பாக அனைவரையும் கவரும். 

நடிப்பு விஷயத்தில் எஸ்.ஜே. சூர்யாவை போன்றே விஷாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. 

மார்க்கின் காதலியாக வந்திருக்கும் ரித்து வர்மா தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். 

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்... ஹீரோ விஷாலா? எஸ்.ஜே.சூர்யா?

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் படத்தை எந்த தோய்வும் இல்லாமல் கொண்டு சென்று இருக்கிறார். வசனங்களில் அனல் தெறிக்கிறது. 

ஆக்சன் காட்சிகளில் பழைய பாடல்களை பின்னணியாக வைத்தது இயக்குநர் லோகேஷ் படங்களை நியாபகப் படுத்தியது. ஜிவி பிரகாஷ் குமார் பின்னணி இசை மிரட்டல்.  அதிரனும்டா பாடல் துள்ளல். 

முதுகு எலும்பை பலப்படுத்த கூடிய மண்டூகாசனம் செய்வது எப்படி?

விஷாலின் டப்பிங் மட்டும் சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. செல்வராகவனுக்கு பெரிதாக ரோல் இல்லாதது ஏமாற்றம். மற்றபடி திரைப்படம் வீக்கெண்டுக்கு மஸ்ட் வாட்ச் மக்களே!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings