ஜவானை தட்டி தூக்கிய மார்க் ஆண்டனி.. மிரட்டும் வசூல் ரிப்போர்ட் !

1

விஷால் இப்போ செம ஹேப்பி அண்ணாச்சி. அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இவருக்கு இப்போது குரு பார்வை உச்சத்தில் இருக்கிறது. 

ஜவானை தட்டி தூக்கிய மார்க் ஆண்டனி.. மிரட்டும் வசூல் ரிப்போர்ட் !
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து அவர் நடித்திருந்த மார்க் ஆண்டனி இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததை தொடர்ந்து இப்போது வசூலும் ஏறுமுகமாக இருப்பது படகுழுவினர் அனைவரையும் கொண்டாட வைத்திருக்கிறது. 

சாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்குமோ?

அதனாலேயே முதல் நாள் வசூலை பார்த்ததுமே இவர்கள் கேக் வெட்டி அந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு இப்படம் குடும்ப ஆடியன்ஸ் முதற்கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் திரைக்கதையின் வேகம் மற்றும் நகைச்சுவை தான். அதிலும் விஷாலை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது.

அந்த வகையில் முதல் நாளில் இப்படம் தமிழ்நாட்டில் 7.88 கோடி வரை வசூலித்திருந்தது. அதே போன்று கேரளாவில் 57 லட்சமும் கர்நாடகாவில் 60 லட்சமும் வசூல் செய்திருந்தது. 

ஆக மொத்தம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி முதல் நாளிலேயே 9 கோடி கலெக்சனை தட்டி தூக்கி இருந்தது.

அதைத் தொடர்ந்து வார இறுதி நாள் என்பதால் இரண்டாவது நாளில் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் 8.64 கோடியும், கேரளாவில் 1.15 கோடியும், கர்நாடகாவில் 1 கோடியும் என மொத்தமாக 10.61 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. 

அதை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்றும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது. அதன்படி 9 கோடிகளை வசூலித்த மார்க் ஆண்டனி மொத்தமாக தற்போது 29 கலெக்ட் செய்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. 

காதலர் தினத்தில் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டுமா?

இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் சக்கை போடு போட்ட ஜவான் வசூலை இது குறைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. இது எல்லாம் உண்மையா? யாராவது சொல்ல முடியுமா?

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings