கமல் படத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சதி. கமல் அளவுக்கு சினிமாவை நேசிக்க யாராலும் முடியாது. இதை பல சமயங்களில் நாம் வெளிப்படையாகவே பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானது நாம் அறிந்ததே. அப்போது கமல் படத்தை டி.டி.எச்-சில் வெளியிடப் போவதாக கூறினார்.
இதனால் கொதித்துப் போன தியேட்டர் உரிமையாளர்கள் இனி உங்களுடைய படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என்று பிரச்சனை செய்தனர். அது மட்டுமின்றி சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து கமல் படங்களுக்கு தடை விதிப்பதில் தீவிரம் காட்டி இருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து கமலுடைய அண்ணன் இதற்கு தீர்வு காண டெல்லிக்கு சென்றார். அங்கு விஸ்வரூபம் படத்திற்கு எதிராக பிரச்சனை செய்யும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் பற்றி CCI-யிடம் அவர் புகார் தெரிவித்தார்.
உடனே பதறிப் போன அனைவரும் கமலை சந்தித்து இந்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று கெஞ்சி இருக்கின்றனர். அதன் பிறகு பல சமரச பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது.
இப்படி தனக்கு எதிராக வந்த கத்தியை அவர்கள் பக்கமே திருப்பி மண்டியிட வைத்தார் கமல். அந்த வகையில் தடைகளை கடந்து சரித்திரம் படைத்த ஒரு படம் தான் விஸ்வரூபம்.
Thanks for Your Comments