Napkin வாங்குவதற்கு மகன்களை பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை !

0

நடிகை ரேகா நாயர் அதிரடி கருத்துகள், சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். எதுவாக இருந்தாலும் அதிரடி தான், ஒளிவு மறைவு இல்லாமல் ஓபனாக பேசக்கூடியவர் என்று பலராலும் விமர்சிக்க கூடும் ஒரு நபர் ரேகா நாயர். 

Napkin வாங்குவதற்கு மகன்களை பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை !
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அதில் அவர், தற்போது சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்.. உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ.

நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியிருந்தார். 

மேலும் ஒரு பேட்டி யொன்றில் பெண்களின் மார்பகத்தை அந்த வார்த்தை சொல்லி தான் அழைக்க வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கிறார்.

இந்நிலையில், ரேகா நாயர் Sanitary Napkin வாங்குவதற்கு கடைகளுக்கு செல்ல மகன்களை பெற்றோர்கள் அனுமதிப்பதே இல்லை அனுப்புவதும் இல்லை என்று கூறியுள்ளார்.

வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !

மேலும் தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை வாங்குவது போல் Sanitary Napkin-ம் ஒரு பொருள் தானே அதனை வாங்குவதற்கு ஏன் அனுமதிக்க மனம் வரவில்லை. 

அதுவும் மனிதன் பயன்படுத்தும் ஒரு பொருள் தானே என்று அதிரடியான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings