சட்ட ரீதியான பதில் இதோ..ம் உயில் எழுதுவதன் மூலமாக தன்னுடைய ரத்த உறவுகள் அல்லது நண்பர்கள் போன்றவருக்கு சொத்து சென்று சேர்வதை தனி நபர்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.
உயில் எழுதுவதன் மூலமாக கிடைக்கின்ற பலன் குறித்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் அறிந்து வைத்திருக்க வில்லை.
வீட்டில் மைனராக உள்ள உங்கள் குழந்தையின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வது தொடங்கி, சொத்தை நியாயமாக பிரித்துக் கொடுப்பது வரையில் உயில் எழுதுவதன் மூலமாக வெவ்வேறு பலன்கள் கிடைக்கின்றன.
நடிகை பிரியா ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?
அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
சொத்தை சுமூகமாக பிரித்துக் கொடுப்பது:
உயில் எழுதுவதால் எந்த வித சட்ட சிக்கலும் இன்றி சொத்துக்கள் பிரிக்கப் படுவதை உறுதி செய்ய முடியும்.
ஒரு வேளை உயில் எழுதி வைத்திருக்கா விட்டால், சொத்துக்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக உங்கள் வாரிசுகள் இடையே போட்டி, பொறாமை உணர்வு ஏற்படக்கூடும் மற்றும் சண்டை சச்சரவுகள் உருவாகலாம்.
தேவைக்கு ஏற்ப பிரிக்கலாம் :
ஆனால் உயில் எழுதுவதன் மூலமாக எந்த பிள்ளைக்கு எந்த சொத்து தேவை என்பதை நாம் முன்பே தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஒரு நாள் சம்பளம் 25 லட்சம்.. ராம் ஜெத்மலானி பற்றி அறியாத உண்மைகள் !
மைனர்களின் உரிமை பாதுகாப்பு :
சொத்து உரிமையாளர் உயிரிழக்கும் போது அவருக்கு மைனர் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான உரிமையை பாதுகாக்க உயில் ஆவணம் அவசியமாகும்.
பிற வாரிசுதாரர்களிடம் இருந்து இவர்களுக்கான சொத்து பங்கீட்டை உறுதி செய்தல் மற்றும் எதிர்கால கல்வி தேவைக்கு பணம் ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உயில் ஆவணம் கைகொடுக்கும்.
குடும்ப உறுப்பினர்களுக்காக நானே உயில் எழுத முடியுமா..?
இவ்வாறு சேர்ப்பதால் உயில் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் வாழ்நாள் முழுவதும் தொடர்புடைய சொத்தை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்யவும் முடியாது.
வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உயில் எழுதி வைக்காவிட்டால் என்ன ஆகும்.?
சொத்து உரிமையாளர் உயில் எழுதி வைக்காமல் உயிரிழந்து விட்டால் அவருடைய காலத்திற்குப் பிறகு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் படி சொத்துக்கள் சென்றடையும்.
இந்துக்களைப் பொருத்த வரையில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 விதிகளின்படி சொத்துக்கள் பிரிக்கப்படும்.
முஸ்லிம்களுக்கு Sharia சட்ட விதிகளின் படியும், கிறிஸ்தவர்கள் Indian Succession Act of 1925 சட்ட விதிகளின் படியும் சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம்.
Thanks for Your Comments