ஆகஸ்ட் 18, 1959ல் மதுரையில் ஓர் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன். இவரது தந்தையின் பெயர் ஸ்ரீ நாராயணன் சீதாராமன். தாயின் பெயர் சாவித்ரி சீதாராமன்.
இவர் விழுப்புரம், மதராஸ், திருச்சி போன்ற ஊர்களில் இவர் படித்துள்ளார். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் 1980ல் இளங்கலை பொருளாதார பட்டம் முடித்தார்.
பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலை பொருளாதாரம் மற்றும் எம்.பில் முடித்தார்.
இதை தொடர்ந்து இந்திய - ஐரோப்பா இடையேயான வர்த்தகம் குறித்து பொருளாதாரத்தில் பி.எச்டி முடிக்க முயன்றார் நிர்மலா சீதாராமன்.
குளிர் காலத்தில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும்... தெரியுமா?
ஆனால், இவரது கணவருக்கு லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸில் ஸ்காலர்ஷிப் கிடைக்கவே, இவர் லண்டன் குடிபெயர்ந்து விட்டார். லண்டன் சென்ற பிறகு, ஆரம்பக் காலக்கட்டத்தில் நிர்மலா சீதாராமன் சேல்ஸ் கேர்ள் வேலை செய்து வந்துள்ளார்.
ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, அதிக விற்பனை செய்ததற்காக நிர்மலா சீதாராமன் சாம்பைன் பாட்டில் ஒன்றை பரிசாக வென்றுள்ளார்.
பிறகு, பிபிசி-ல் இவர் பணிபுரிந்ததாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. மேலும், PWC எனப்படும் ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் எனும் நிறுவனத்தில் இவர் சீனியர் மேனேஜராக வேலை செய்து வந்தார்.
பிறகு, நிர்மலா சீதாராமன் National commission for women-ல் 2003-05ம் காலக்கட்டத்தில் 3 ஆண்டு பதவி காலம் முடிந்த பிறகு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
நிர்மலா சீதாராமன் அவரது கணவர் குடும்பம் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை பின்தொடர்ந்து வருபவர்களாக இருந்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பம் என கூறி நிர்மலா சீதாராமன் இந்த முடிவை எடுத்தார்.
வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !
நிர்மலா சீதாராமன் தனது கணவர் பிரபாகரை டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தான் முதன் முறையாக சந்தித்தார். 1986ல் இவர்களுக்கு திருமணம் ஆனது.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தனது கணவருக்காக பி.எச்டி படிப்பை தியாகம் செய்தார், தனது குழந்தையின் எதிர் காலத்திற்காக லண்டனில் தனக்கு கிடைத்த நல்ல வேலையை தியாகம் செய்தார்.
கர்நாடக சங்கீதத்தில் அதிக விருப்பம் கொண்ட நிர்மலா சீதாராமன் அவர்களுங்கு, சமையல், பயணம், மலையேற்றம் போன்றவற்றிலும் மிகுதியான ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இது நிர்மலா சீதாராமன் கணவர் வீட்டில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமும் கூட. இதற்காக ஒரு முறை அப்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைவரிடம் இதையே காரணமாக வைத்து வீட்டுக்கு சீக்கிரம் செல்வதற்கு அனுமதி கோரியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
முதுகு எலும்பை பலப்படுத்த கூடிய மண்டூகாசனம் செய்வது எப்படி?
தனது in-Law-க்களுக்கு அன்புடன் நிறைய நிறைய ஊறுகாய் சமைத்து தருவதை முழு விருப்பத்துடன் பின்பற்றி வருகிறார்.
மேலும் தமிழ் (பிறந்த வீடு) மற்றும் தெலுங்கு (புகுந்த வீடு) பாரம்பரிய வழக்கங்களை பின்பற்றுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
Thanks for Your Comments