ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா... வினோத வழக்கம்... பின்னணி என்ன?

0

ஜப்பானில் நிர்வாண திருவிழா கொண்டாடப் படுகிறது. இது கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது.

ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா... வினோத வழக்கம்... பின்னணி என்ன?
ஹடகா மட்சூரி அல்லது நிர்வாண திருவிழா முதலில் ஜப்பானின் ஒகாயாமாவில் உள்ள புகழ்பெற்ற சைதாய்-ஜி கோவிலில் தொடங்கியது. 

10000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். ஆண்கள் வெள்ளை துணியால் வெறும் இடுப்பை மட்டும் மறைக்கின்றனர்.

அந்த வினோத விழா எதற்காக கொண்டாடப் படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இது 'நிர்வாண விழா' என்று அழைக்கப் பட்டாலும், விழாவில் பங்கேற்பவர்கள் முற்றிலும் நிர்வாணமாக இல்லை. பங்கேற்பாளர்கள் வெள்ளை துணியை இடுப்பை சுற்றி அணிந்து பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர்.

தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி?

இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கும் போது திருவிழா நடத்தப் படுவதால், ஆண்களுக்கு இடுப்பு துணியுடன் இருப்பதும், குளிர்ந்த நீர் குளங்களில் குதிப்பதும் சவாலாக உள்ளது.

இந்த அசாதாரண திருவிழா உலகம் முழுவதிலுமிருந்து பார்வை யாளர்களை ஈர்க்கிறது. சைதை-ஜி கோவிலில் திருவிழா சடங்கு பொதுவாக மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 

இசை நிகழ்ச்சிகள் முதல் உணவுக் கடைகள் என திருவிழா களைக்கட்டும். மதிய வேளைகளில், இடுப்பு துணி அணிந்த ஆண்கள் பனிக்கட்டி குளிர்ந்த குளத்தின் வழியாக ஓடுகிறார்கள். 

ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா... வினோத வழக்கம்... பின்னணி என்ன?

இது ஒரு வகையான விளையாட்டுக்கு முந்தைய உடற்பயிற்சி. பின்னர், உண்மையான போட்டிகள் நடத்தப் படுகின்றன. 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த அசாதாரண நிர்வாண திருவிழாவின் பிறப்பிடமாக சைதை-ஜி கோவில் நம்பப்படுகிறது.

பிரியாணி இலைக்கு ஏதேனும் மருத்துவ குணங்கள் உள்ளதா?

இந்த விழாவின் நோக்கம் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாகும். ஏனெனில் ஒரு நிர்வாண நபரைத் தொடுவதன் மூலம் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் விட்டுவிட முடியும் என்று நம்புகின்றனர்.

அதனால் தான், நிர்வாண மக்கள், கோயிலில் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, நகரத்தின் தெருக்களில் நடந்து செல்கின்றனர், அங்கு யார் வேண்டுமானாலும் அவர்களைத் தொடலாம். இதன் மூலம் அவர்கள் அதிர்ஷ்டத்தை தேடி கொள்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings