இளைஞரை உயிருடன் புதைத்த மக்கள்... வினோத பண்டிகை... காரணம் என்ன?

0

இரவில் வெளியில் சென்ற இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. தென் அமெரிக்க பகுதியை சேர்ந்த டோபா மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை பச்சமாமா. 

இளைஞரை உயிருடன் புதைத்த மக்கள்... வினோத பண்டிகை... காரணம் என்ன?
இது இயற்கை மற்றும் பூமி மக்களுக்கு கொடுக்கும் வளங்களுக்காக நன்றி சொல்லும் விதமாக அனுசரிக்கப் படுகிறது. 

இந்த டோபா பழங்குடி மக்கள் அர்ஜென்டீனா, பராகுவே மற்றும் பொலிவியா போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த பண்டிகையின் போது, இவரை இயற்கைக்கு காணிக்கையாக அளித்திருக்கின்றனர். 

இதனை சுல்லு என்று அழைக்கின்றனர். இந்த விழாவின் போது தான் விக்டர் ஹ்யூகோ அல்வரேஸ் என்ற இளைஞரை உயிருடன், 6 அடி குழியில் புதைத்து விட்டனர் டோபா மக்கள். 

இதில் ஹைலைட் என்ன வென்றால், நைட் அவுட்டிற்காகச் சென்ற விக்டர், நன்றாக குடித்திருந்ததனால் தன்னை சுற்றி நடப்பது தெரியாமல் இருந்துள்ளார்.

ஜப்பானில் கொண்டாடப்படும் நிர்வாண விழா... வினோத வழக்கம்... பின்னணி என்ன?

இந்த விழாவில் ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டவர் பின் தனது வீட்டில் படுத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, நடு இரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக விழித்துள்ளார்.

அப்போது தான் தன்னை மக்கள் உயிருடன் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துள்ளதை அவர் உணர்ந்துள்ளார். பின்னர் சவப்பெட்டியின் கண்ணாடியை உடைத்து வெளியேறியுள்ளார் விக்டர்.

மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் இவர் கூறுவதை போலீசார் நம்ப மறுத்ததாக விக்டர் தெரிவித்திருந்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings