தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒருமுறை சொத்து உரிமையாளர் களிடமிருந்து சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது, சொத்து வரியில் 5% அல்லது ரூ.5000 வரையிலும் ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. அந்த வகையில், சென்னையில் மட்டுமே அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் ரூ.372.74 கோடி சொத்து வரியாக வசூலிக்கப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
ஏன் டவ் சோப் சிறந்தது என்று தெரியுமா?
இதனால், இந்த சொத்து உரிமை யாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை வழங்கப் பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு க்யூஆர் கோடு மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடுகளுக்குமென கொடுக்கப் பட்டுள்ள க்யூ ஆர் கோடு மூலமாகவே பொதுமக்கள் ஸ்கேன் செய்து சரியான தொகையை செலுத்திக் கொள்ளாம்.
இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய சேவை சரியாக செய்யப் படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.
சட்டப்பூர்வ அறிவிப்பு (லீகல் நோட்டீஸ்) எப்போது அனுப்பலாம்?
இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும்.
Thanks for Your Comments