தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், வளையப்பேட்டை அருகே மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வள்ளி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆடி மாதம் காற்றுக்காலம் ஆகும். இந்த சமயத்தில் தென்மேற்கு பருவ மழையும் தமிழகத்தில் பரவலாக பெய்யும். இந்நிலையில் தென்மேற்கு பருவ காற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலமாக வீசியது.
அப்போது வளையப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வள்ளி என்ற பெண்ணும். சோபனா என்ற பெண்ணும் சென்று கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் பலத்த காற்றின் காரணமாக அந்த பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த மரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வள்ளி மீது விழுந்தது.
இதில் வள்ளி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வள்ளி உடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சோபனா படுகாயம் அடைந்தார்.
சோபானா மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரம் முறிந்து விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மக்களே இது காற்றுக்காலம் என்பதால் சாலைகளில் கவனமாக சென்று வாருங்கள். பொதுவாக மழை காலங்களில் சாலைகள் மோசமாக இருக்கும்.
சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?
ஏனெனில் இரவில் தெரியாத சாலைகளில் எங்கு பள்ளம் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. சாலைகளில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்வது பாதுகாப்பானது ஆகும்.
Thanks for Your Comments