குழந்தையை கடித்து குதறிய எலிகள் !

0

பெற்றோரை கைது செய்த பொலிஸார் மெரிக்காவில் 6 மாத பச்சிளம் குழந்தையை எலிகள் கடிக்கும் அளவிற்கு அலட்சியமாக இருந்த பெற்றோரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

குழந்தையை கடித்து குதறிய எலிகள் !
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தை சேர்ந்த டேவிட் மற்றும் ஏஞ்சல் சோனாபம் தம்பதியின் 6 மாத குழந்தையை எலிகள் 50 இடங்களில் கடித்து குதறியதில் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

காயமடைந்த 6 மாத பச்சிளம் குழந்தை உட்பட இந்த தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளன. கடந்த 13ம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் போது டேவிட் தன்னுடைய குழந்தையை எலிகள் கடித்து விட்டதாக தெரிவித்து பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனடிப் படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் கை கால் விரல்கள் என கிட்டத்தட்ட குழந்தையின் உடலில் 50 இடங்களில் எலி கடித்து குதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காலங்கடந்த திருமணங்கள் கேள்விக் குறியாகும் வாழ்க்கை

அத்துடன் குழந்தையை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வீட்டை சுற்றி பார்த்த போது குப்பை மற்றும் எலி கழிவுகள் நிறைந்து இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.

இதையடுத்து குழந்தையை பாதுகாப்பாக வளர்காமல் அலட்சியமாக இருந்த காரணத்திற்காக பெற்றோர் மற்றும் குழந்தையின் அத்தை ஆகியோரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல் கவலைக் கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings