தினம் தினம் அழுவேன்... குழந்தையை தத்து எடுக்க காரணம்... நடிகை அபிராமி !

0

கேரளாவை சேர்ந்த நடிகை அபிராமி, கல்லூரியில் படிக்கும் போது மலையாள சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  

தினம் தினம் அழுவேன்... குழந்தையை தத்து எடுக்க காரணம்... நடிகை அபிராமி !
1999-ஆம் ஆண்டு வெளியான பத்ரம் என்கிற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார் அபிராமி. நடிகை அபிராமி 2001 ஆம் ஆண்டு வெளியான வானவில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின்,  சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் அபிராமி நடித்திருந்தாலும்,  விரும்பாண்டி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

இதையடுத்து, ராகுல் என்பரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அபிராமி பேட்டி அளித்துள்ளார். 

அதில், நானும் என் கணவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.  வளர்ந்ததும் இருவரும் வேலையை பார்க்க கிளம்பி விட்டோம். 

வேலை நிமிர்த்தமாக அமெரிக்கா சென்ற போது மீண்டும் எங்கள் நட்பு வளர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பதால் அதை செய்தேன். 

அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்து இருக்கிறேன். ஏன் என்றால் கல்கி என்பது ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.

காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?

ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்தது குறித்து பேசிய அபிராமி, ஆர் யூ ஓகே பேபி படத்தின் கதையை லட்சுமி மேடம் என்னிடம் சொல்லும் போது ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால், நடிக்க ஒப்புக் கொண்டேன்.  

ஒரு குழந்தையை தத்து எடுப்பதால் அந்த குடும்பத்தினரின் மனவலியை சொல்லும் கதை என்பதால், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தினமும் அழுதுக் கொண்டே இருப்பேன் என்று அபிராமி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings