எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்த காரணம் என்ன?

0

சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. 

எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்த காரணம் என்ன?
ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள் தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவே தான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன.

நாம் ரயில் நிலையங்களிலோ, போக்குவரத்து சிக்னல்களிலோ ஒரு ஐந்து குறைந்தது ஐந்து நிமிடமானது காத்து நிற்பதுண்டு. சிவப்பு விளக்கு எரியும் போது, எதற்காக நிற்கின்றோம். 

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

மஞ்சள் நிற விளக்கு எரிந்த உடன் ஏன் தயாராகின்றோம். பிறகு பச்சை விளக்கு எரியத் துவங்கியவுடன் ஏன் செல்கின்றோம். ஆனால் எதற்காக நிற்க சிவப்பு விளக்கை பயன்படுத்த வேண்டும் நினைத்து இருக்கின்றோமா? 

இந்த பச்சை, மஞ்சள் நிறங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு சிவப்பு நிறத்துக்கு மட்டும் இருக்கின்றது. இதற்கு ஏன் என்று அறிவியல் பூர்வமாகவும் உளவியல் ரீதியாகவும் பார்த்தால், நமக்கே பிரமிக்க வைக்கின்றது.

சிவப்பு நிறங்கள் முதலில் ரயில்கள் நிற்க பயன்படுத்தப் பட்டது. பிறகு ரயில்கள் இயங்கத்துக்கு பச்சை நிறம் என்று பயன்படுத்தப் பட்டது. 

பிறகு வாகன போக்குவரத்து வந்த பிறகு விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் வாகங்களை நெசரில் இல்லாமல் சாலைகளில் இயக்கவும் சிக்கனல் பயன்பாடு கொண்டு வரப்பட்டது. 

தற்போது லேசர் எனப்படும் அகச்சிவப்பு கதிரை துப்பாக்கியில் பயன்படுத்தி இன்று ராணுவத்தினர் எதிரியை துள்ளியமாக சூட் செய்து விடுகின்றனர். 

முதலில் 19ம் நூற்றாண்டில் முதன் முதலில் ரயில்கள் இயக்கத்துக்காக சிவப்பு சிக்னல் லைட்கள் பயன்படுத்தப் பட்டன. பிறகு செல்ல பச்சை லைட் பயன்படுத்தப் பட்டன. 

ஒரு சில காலத்திற்கு பிறகு தான் மஞ்சள் லைட் பயன்பாட்டுக்கு வந்தது. சிவப்பு நிற விளக்கை டிராப்பிக் சிக்னலில் முதலில் 1912ம் ஆண்டு ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. 

இதை அறிமுகப் படுத்தியவர் டிட்ராய்ட் போலீசை சேர்ந்த லெஸ்டர் வயர். முதலில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் பயன்படுத்தப் பட்டன. பிறகு 1920ம் ஆண்டு மஞ்சள் நிறம் சேர்ந்த விளக்கு பயன்படுத்த படுகின்றது. 

சிவப்பு நிறம் என்றாலே பொதுவாக ரத்தம் தொடர்பானதாகவும் உள்ளுணர்வை அதிகரிக்க செய்வதாக இருக்கின்றது. மேலும் இந்த சிவப்பு நிறம் அபாயத்தை பெரிதும் பிரதி பலிப்பதாக கருத்தப் படுகின்றது. 

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

அங்கு செல்ல வேண்டும் நில். எச்சரிக்கையாக இரு சொல்வதாக பயன்படுத்தப் படுகின்றது. எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் ஏன்? சிவப்பு நிறம் லைட்கள் மற்றும் எச்சரிக்கை செய்ய பொதுவாக பயன்படுத்தப் படுகின்றது. 

ஏன் சிவப்பை மட்டும் எச்சரிக்கை செய்ய பயன்படுத்து கின்றோம். மஞ்சளை பயன்படுத்த கூடாதா என்று நீங்கள் கேட்கலாம் கேட்க உரிமையும் உண்டு. ஆனால் அது போல பயன்படுத்த முடியாது. 

எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்த காரணம் என்ன?

சிவப்பு நிறத்திற்கு மட்டும் தான் எச்சரிக்கை செய்ய தனி சிறப்பு உள்ளது. சிவப்பு நிறமானது மழை, பனி, வெயில், இருள் ஆகியவைகளில் சிக்காமல் நீண்ட தூரத்திற்கு ஊருவி பாயும் தன்மை கொண்டுள்ளது. 

இதில் அதிக அடர்த்தியான கதிர்களில் வெளிப்படுகின்றது. இதனால் தான் பயன்படுத்தப் படுகின்றது. 

டிராப்பிக் சிக்னல், ஏர்போர்ட், மெட்ரோ, ரயில்வே, மின்சாதனங்கள், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமானவை களிலும் சிவப்பு நிறம் இல்லா விட்டால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். 

தற்போது வரை சிவப்பு நிறம் என்பது நமக்கு உதவிகரமாக இருந்து வருகின்றது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings