முகமது சிராஜ்... முகமது சிராஜ்.. இது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இன்றைய ஆரவார கொண்டாட்ட முழக்கம்.
ஏனென்றால், பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒரே ஒரு ஓவரில் மொத்தமாக அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி விட்டார் முகமது சிராஜ்.
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?
ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 4 விக்கெட்டு கொத்தாக அள்ளி விட்டார். இப்படியொரு இலங்கை அணியின் சரிவை இந்திய அணியின் வீரர்களே எதிர்பார்க்க வில்லை.
அந்த மாயாஜால மந்திர பவுலிங்கிற்கு காரணம் சிராஜ். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதைப் போல அவர் வீசும் ஓவர்களில் எல்லாம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.
கேட்ச், போல்டு, கேட்ச் என இலங்கை வீரர்கள் ஒவ்வொருவராக அவுட்டாகிக் கொண்டே இருந்தனர். சிராஜை எப்படி எதிர் கொள்வது என சுத்தமாக அவர்களுக்கு தெரியவில்லை.
யாராவது இந்த காட்டாற்று வெள்ளத்துக்கு அணை போடுவார்களா? என பார்த்தால், அதற்கு கொஞ்சமும் வழி கொடுக்காமல் பந்து வீச்சில் பின்னி பெடலெடுத்து விட்டார் சிராஜ்.
இதனால் பல சாதனைகளையும் அவர் வசம் கொண்டு வந்து விட்டார். முதன் முறையாக இந்திய பவுலர் ஒருவர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
அந்த சாதனை சிராஜ் வசம் வந்திருக்கிறது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்.
குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸூடன் இணைந்துள்ளார்.
காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !
மேலும், இந்த சாதனையையும் செய்திருக்கும் முதல் இந்தியர் சிராஜ் தான். 6 ஓவர்களில் 1 ஓவர் மெய்டன் வீசி 13 ரன்கள் மட்டுமே விடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி யிருக்கிறார் சிராஜ்.
இது ஒருநாள் போட்டியில் அவருடைய சிறந்த பந்துவீச்சாக இடம் பெற்றுள்ளது. மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றாக சிராஜின் ஸ்பெல் பதிவாகி யிருக்கிறது.
அவரின் இந்த ஆக்ரோஷமான பந்துவீச்சில் இருந்து இலங்கை அணி இறுதி வரை மீளவே முடியவில்லை.
Thanks for Your Comments