சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த அளவுக்கு நல்ல செய்திகள் வேகமாக பரவுகிறதோ அந்த அளவுக்கு தவறான தகவல்களும் பரவும் என்பதற்கு உதாரணம் அமைந்துள்ளது ரெனால்ட்ஸ் பேனா தயாரிப்பு குறித்த செய்தி.
அதே சமயம் உறுதி செய்யப்படாத போலியான தகவல்களும் உண்மை போலவே பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்து விடுகிறது.
அப்படித் தான் ரெனால்ட்ஸ் பேனா தயாரிப்பு நிறுத்தப் பட்டது என்ற அறிவிப்பு அண்மையில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
ஏ.டி.எம். பின் மறந்து போயிடுச்சா? புதிய பின் நம்பர் பெற வழிகள் !
ரெனால்ட்ஸ் பேனா :
கடைநிலை அலுவலக உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள், பெரும் தொழிலதிபர்கள் என்று சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப் படுகின்ற ஒரு பொருளாக ரெனால்ட்ஸ் இருக்கிறது.
Reynolds 045 Fine Carbure என்ற பேனாவை பிடித்து எழுதிடாத கைகள் இருக்க முடியாது. ப்ளூ, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ண மைகளை கொண்ட பேனாக்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
அவற்றில் வெள்ளை வெளிக்கூடு மற்றும் ஊதா நிற மூடி அமைந்த பேனா தான் மிகவும் பிரபலமாகும்.
தயாரிப்பை நிறுத்தியதா ரெனால்ட்ஸ்?
ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது என்று பதிவிட்டார். இந்த பதிவு உடனடியாக வைரல் ஆகிய நிலையில் சுமார் 2.7 மில்லியன் மக்கள் லைக் செய்தனர்.
50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் நினைவலைகளை கூறி கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ட்விட்டர் பயனாளர் ஒருவர் வெளியிட்ட கமெண்டில், நான் இப்போதும் ரெனால்ட்ஸ் பேனா பயன்படுத்தி வருகிறேன். தற்சமயம் என்னிடம் 15 பேனாக்கள் உள்ளன.
அவையே கடைசியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். ரெனால்ட்ஸ் பேனா கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் பலவற்றை மற்றொரு பயனாளர் பகிர்ந்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
5 நாட்கள் இந்த கிராமத்து பெண்கள் ஆடை அணிவதில்லை !
மறுப்பு தெரிவித்த ரெனால்ட்ஸ் நிறுவனம் :
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அன்பார்ந்த வாடிக்கை யாளர்களே மற்றும் தொழில் கூட்டு பங்குதாரர்களே, பேனா தயாரிப்பு நிறுத்தப் பட்டது என்ற சமீபத்திய தகவல் தவறானதாகும்.
இந்தியாவில் 45 ஆண்டுகால பாரம்பரிய பின்னணியை கொண்ட ரெனால்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதுமையான தரமான தயாரிப்புகளை வெளியிடும் என்று கூறப்பட்டிருந்தது.
Thanks for Your Comments