தற்போது கோடிகளில் புரளும் விராட் கோலி, தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களை விட அந்த காலத்திலேயே செல்வ செழிப்புடன் வாழ்ந்த பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இருந்தார்.
தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் நாம் அனைவரும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ். தோனி ஆகியோரின் பெயர்களை சொல்வோம்.
இவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளன. கோடிக்கணக்கில் சம்பளம் மட்டுமின்றி விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள் என ஒவ்வொரு அசைவுக்கும் கோடிகள் கொட்டுகின்றன.
புரோஸ்டேட் பெரிதானால் ஏற்படும் விளைவுகள் !
பல நூறு கோடி சொத்து மதிப்பில் வீடுகள், பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் என ஆடம்பரமான வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவரையும் விட ஒரு பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் இருந்தார். வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பணத்தில் புரண்ட அந்த கிரிக்கெட் வீரர் பெயர் பூபிந்தர் சிங்.
சொல்லப் போனால் சச்சின், தோனி, கோலியை ஆகிய மூன்று பேரின் சொத்துக்களை சேர்த்தாலும் இவரது சொத்து மதிப்புக்கு ஈடாகாது. பூபிந்தர் சிங் கிரிக்கெட் வீரராவதாற்கு முன் மகாராஜாவாக இருந்தவர்.
1900-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பஞ்சாப் மன்னராக இருந்தார். நாட்டின் மிகப் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் இவர்.
மகாராஜாவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கிரிக்கெட் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக இந்தியாவின் ஆரம்பகால கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.
அடேங்கப்பா அருமை
ReplyDelete