வில்லன் விநாயகன் வாங்கிய சம்பளம் தெரியுமா?

0

ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்து நடிகர் விநாயகன் பதில் அளித்துள்ளார். ஜெயிலர் படத்திற்காக அவர் ரூ. 35 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டிருந்த நிலையில் அதனையும் அவர் மறுத்திருக்கிறார். 

வில்லன் விநாயகன் வாங்கிய சம்பளம் தெரியுமா?
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் ரூ. 630 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவக்குமார் ஜாக்கி ஷெரோப், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

ஜெயிலர் படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் விநாயகன், வர்மா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

யாரோ சிலர் நான் ஜெயிலர் படத்திற்காக ரூ. 35 லட்சம் சம்பளமாக பெற்றேன் என்று கூறியுள்ளார்கள். நல்ல வேலையாக இது படத்தின் தயாரிப்பாளரின் கவனத்திற்கு சென்றிருக்காது என்று நம்புகிறேன். 

காதலர் தினத்தில் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டுமா?

நான் ரூ. 35 லட்சத்தை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன். நான் என்ன சம்பளம் கேட்டேனோ அதை தயாரிப்பாளர் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை மிகவும் நல்ல விதமாக நடத்தினார்கள்.

என் வாழ்நாளிலேயே அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான். இந்தப் படத்திற்காக என்னால் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் விநாயகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருப்பினும் அவர் தமிழில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் இருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings