உலகில் முதன் முதலில் குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய விஞ்ஞானி காலமானார். அவருக்கு வயது 79. ஒரு உயிரை போலவே மற்றொரு உயிரை உருவாக்குவது குளோனிங்.
அதாவது, அதே உருவ அமைப்பு கொண்டதே குளோனிங் எனப்படுகிறது. இது மனிதர்கள் மத்தியில் சாத்தியப்பட வில்லை, என்றாலும், விலங்குகளுக்கு 1996லேயே சாத்தியப்பட்டு விட்டது.
இப்படிப்பட்ட இந்த குளோனிங் முறையை முதன் முதலில் பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் கூறினார். முதன் முதலில் கூறிய போது உலகம் முழுவதும் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக மிகப்பெரிய விவாதங்கள் எழுந்தன.
புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?
இவர் முதலில் குளோனிங் முறையில் ஆடு ஒன்றை உருவாக்கினார். 6LL3 என்று குறிப்பிடப்பட்ட அந்த ஆட்டிற்கு அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் நினைவாக டோலி என்று பெயரிடப்பட்டது.
இது அப்போது மிகப் பெரிய விஞ்ஞான புரட்சியாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில், டோலி ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார்.
பார்கின்சன் நோயின் காரணமாக அவர் உயிரிழந்ததாக ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments