செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. தேடி வரும் லட்சம் !

0

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் செல்ல குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் மற்றும் வீடு என்று எதிர் காலத்தில் வரக் கூடிய செலவுகள் சற்று அதிகமாக இருக்கலாம். 

செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. தேடி வரும் லட்சம் !
அதனை சமாளிப்பதற்கு நாம் இன்றையே நாளில் இருந்தே சேமிக்க தொடங்க வேண்டும். முதலீடு அல்லது சேமிப்பு திட்டங்கள் பல இருக்கின்றன என்றாலும், உங்கள் செல்வ மகளுக்கு எது உதவியாக அமையும் என்பதை நீங்கள் சிந்தித்து தேர்வு செய்யலாம்.

மத்திய அரசு வழங்குகின்ற செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் அதிகப் படியான வட்டி வழங்கப் படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் பட்சத்தில் மகளின் உயர் கல்வி செலவுக்கும், திருமண செலவுக்கும் நீங்கள் பணம் சேர்த்து வைக்க முடியும். 

இந்தத் திட்டத்தில் எப்படி இணையலாம், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !

எப்போது தொடங்கலாம்?

உங்கள் செல்லக் குழந்தை பிறந்த அடுத்த சில நாட்களிலேயே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். உங்கள் குழந்தைக்கு 10 வயது பூர்த்தி அடையும் முன்பாக இந்தத் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். 

இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த முடியும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டியை அரசு ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை சீராய்வு செய்கிறது. 

2023ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் 8 சதவீதமாக தொடருகிறது. 

உங்கள் மகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது முதிர்வு தொகையில் 50 சதவீத பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். 21 வயதாகும் போது எஞ்சியுள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.64 லட்சம் பெறுவது எப்படி?

உங்கள் குழந்தையின் பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500ஐ நீங்கள் செலுத்தி வர வேண்டும். அதாவது தினசரி ரூ.416 செலுத்த வேண்டி யிருக்கும். 

ஆண்டுக்கு உச்ச வரம்பாக இந்தத் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அந்த வகையில், தினசரி ரூ.416 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.

சிறுநீர் கழிக்கக்கூட நேரம் கொடுக்காத பள்ளிகள் !

முதிர்வு காலத்தின் போது இந்தத் திட்டத்தில் 7 சதவீத வட்டி கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், மகளின் 21 வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.63,79,634 ஆகும். 

இதில் நீங்கள் முதலீடு செய்த ரூ.22,50,000 போக, எஞ்சியுள்ள ரூ.41,29,634 லாபம் ஆகும். ஆக தினசரி ரூ.416 அல்லது மாதம் ரூ.12,500 என்ற அளவில் நீங்கள் முதலீடு செய்து வந்தால் உங்கள் குழந்தையின் எதிர்கால தேவைக்கு ரூ.64 லட்சம் பெற முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings