நம்மில் பெரும்பாலோனோர் சிந்திப்பது கிடையாது. சிந்தித்து இருந்தால் இன்று நம்மில் ஏராளமானோர் பெரும் ஞானியாக இருந்திருக்க முடியும். கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் சிந்தித்தால் போதாது.
நாம் ரயில் நிலையங்களிலோ, போக்குவரத்து சிக்னல்களிலோ ஒரு ஐந்து குறைந்தது ஐந்து நிமிடமானது காத்து நிற்பதுண்டு. சிவப்பு விளக்கு எரியும் போது, எதற்காக நிற்கின்றோம்.
மஞ்சள் நிற விளக்கு எரிந்த உடன் ஏன் தயாராகின்றோம். பிறகு பச்சை விளக்கு எரியத் துவங்கியவுடன் ஏன் செல்கின்றோம். ஆனால் எதற்காக நிற்க சிவப்பு விளக்கை பயன்படுத்த வேண்டும் நினைத்து இருக்கின்றோமா?
பச்சை, சிவப்பு, மஞ்சள்... போக்குவரத்து விளக்குகள் ஏன் இந்த மூன்று வண்ணங்களைக் கொண்டுள்ளன என்று நீங்கள் எப்போதும் யோசித்து இருக்கிறீர்களா?
இளைஞரை உயிருடன் புதைத்த மக்கள்... வினோத பண்டிகை... காரணம் என்ன?
சிவப்பு, பச்சை, மஞ்சள்
அது ஏன் என்பது பற்றி பலரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் இதைப் பற்றி பல ஆண்டுகளாக யோசித்துக் கொண்டு இருக்கலாம். இந்த கேள்விக்கான பதிலை இன்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
போக்குவரத்து சமிக்ஞைகள்
இந்த வண்ணங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை அறிய, போக்குவரத்து விளக்குகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிவது உதவியாக இருக்கும்.
1910ஆம் ஆண்டில், நாட்டில் முதல் போக்குவரத்து சமிக்ஞைகள் வந்தன. கார்களின் ஓட்டத்தை பராமரிக்க அதிகாரிகள் விசில் மற்றும் விளக்குகளைப் பயன்படுத்தி, எப்போது நிறுத்த வேண்டும் அல்லது செல்ல வேண்டும் என்பதை ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்தினர்.
விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !
போக்குவரத்து விளக்குகள்
போக்குவரத்து கையேடு
1935ஆம் ஆண்டில், ஃபெடரல் நெடுஞ்சாலை நிர்வாகம் சீரான போக்குவரத்து கட்டுப்பாட்டு சாதனங்களின் கையேட்டை உருவாக்கியது. அதில் அனைத்து அடையாளங்கள் மற்றும் சமிக்ஞைகளுக்கான தரநிலைகள் வரையறுக்கப் பட்டன.
அந்தக் கையேடு போக்குவரத்து விளக்குகள் எல்லா இடங்களிலும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று கூறியது.
சிக்னலில் வெள்ளை கலர்
இந்த போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு என்றால் நிறுத்தம் என்றும், வெள்ளை என்றால் செல் என்றும், பச்சை என்றால் எச்சரிக்கையுடன் செல்லலாம் என்றும் பொருள் இருந்தது.
பிறகு வெள்ளை நிறத்திற்குப் பதில் பச்சை நிறம் மாற்றப்பட்டது. எச்சரிக்கையுடன் செல்லலாம் என்பதைக் குறிக்க மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப் பட்டது.
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்யக் கூடாததும் !
சிவப்பின் சிறப்பு
இதனால் நிறுத்தச் சொல்லும் சிக்னல் தூரத்தில் வரும் போதே தெரிந்து விட்டால் மிகவும் உதவியாக இருக்கும். இதனால் தான் நிறுத்தத்தைக் குறிக்க சிவப்பு நிறம் பயன்படுத்தப் படுகிறது.
டிராப்பிக் சிக்னல், ஏர்போர்ட், மெட்ரோ, ரயில்வே, மின்சாதனங்கள், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமானவை களிலும் சிவப்பு நிறம் இல்லா விட்டால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
தற்போது வரை சிவப்பு நிறம் என்பது நமக்கு உதவிகரமாக இருந்து வருகின்றது.
Thanks for Your Comments