400 கார்கள் வைத்திருக்கும் சலூன் கடைக்காரர்..₹1,200 கோடிக்கு சொத்து.. யார் இந்த ரமேஷ் பாபு?
முடி திருத்துபவராக இருந்து தொழில் முனைவோராக மாறியிருக்கும் ரமேஷ் பாபுவிடம் சொந்தமாக இருக்கும் கார்களின் பட்டியலை கேட்டால் அசந்துப் போய் விடுவீர்கள்.
சிறிய சலூன் கடையை நடத்தி வந்த ரமேஷ் பாபுவின் வாழ்க்கை எந்தச் சிக்கலும் இல்லாமல் நன்றாக சொன்றுக் கொண்டிருந்தது. திடீரென்று அவருடைய தந்தை இறந்த பின்னர் தான் ரமேஷின் வாழ்க்கை முற்றிலும் மாறிப் போனது.
சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?
அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடியது என்று தான் சொல்ல வேண்டும். கடுமையான பணக் கஷ்டத்தில் சிக்கித் தவித்த ரமேஷ் பாபு, கிடைத்த வேலை யெல்லாம் செய்யத் தொடங்கினார்.
தொழில் வளர்ச்சியடைய ஆரம்பித்ததும் அதிக வசதிகளைக் கொண்ட சொகுசு கார்களை ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தார்.
முதல் சொகுசு காராக மெர்சிடஸ் ஈ க்ளாஸ் செடன் மாடல் காரை ரூ.75 லட்சத்திற்கு வாங்கினார். அவருடைய தொழில் வளர வளர, அவரிடம் இருந்த சொகுசு கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.
தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டே சலூனையும் நடத்தி வரும் ரமேஷின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட கார்கள் ரமேஷின் சேகரிப்பில் உள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக கார்களை சொந்தமாக வைத்துள்ள நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரமேஷ்.
இவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அமீர் கான், சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்கள் இவரின் வாடிக்கையாளர்கள்.
மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியமா?
ரமேஷ் பாபுவின் கார்கள்
ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடல் கார் மற்றும் ரூ.2.6 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் S600 போன்ற சொகுசு கார்களும் ரமேஷிடம் உள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments