தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் G என ஸ்டிக்கர் ஒட்டப் பட்டுள்ளதாகவும், இந்திய அரசு, தமிழ்நாடு அரசு எனக் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் கூறி,
சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
ஆனால், விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோர முடியும் என தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
இதனால், மனுவில் கோரிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது போன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Thanks for Your Comments