நன்றி தெரிவித்த காளி வெங்கட்... திக்குமுக்காடுற அளவிற்கு கொண்டாடுறீங்க !

1 minute read
0

சில திரைப்படங்களில் ஒரு அண்ணனாக நகைச்சுவை நடிகனாக தோழனாக நடித்தவர் நடிகர் காளி வெங்கட். 

நன்றி தெரிவித்த காளி வெங்கட்... திக்குமுக்காடுற அளவிற்கு கொண்டாடுறீங்க !
சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அநீதி. வசந்த பாலன் இயக்கியிருந்த இப்படத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடித்திருந்தனர். 

முந்திரியால் செய்யப்படும் காஜூ கத்லி ஸ்வீட் செய்வது எப்படி?

ஓடிடி தளத்தில் வெளியாகி யிருக்கும் இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸூக்கு அப்பாவாக நடித்திருந்த காளி வெங்கட்டின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. 

அவரது நடிப்பை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து காளி வெங்கட் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

திக்கு முக்காடும் அளவு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இயக்குநர், நடிகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings