என்னுடைய இலக்கும் அணியின் இலக்கும் இதுதான்.. ரோஹித் !

0

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. 

என்னுடைய இலக்கும் அணியின் இலக்கும் இதுதான்.. ரோஹித் !
இத்தொடர் முடிந்தப் பிறகு, 37 நாட்களில் உலகக் கோப்பை 2023 தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்படி, அடுத்த 2 மாதங்களில் இந்திய அணி இரண்டு முக்கிய ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக உலகக் கோப்பை வெல்லாததால், இந்த குறையை போக்க இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு தொடர்கள் குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டி கொடுத்துள்ளார். 

அதில், ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி, மனதை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாராகி வருகிறேன். 

குறிப்பாக, 2019 உலகக் கோப்பையின் போது, என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இருக்க விரும்புகிறேன். அதே மனநிலையில் விளையாடினால் தான் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறினார்.

மேலும் பேசிய ரோஹித், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 648 ரன்களை அடித்தேன். அப்போது என்ன செய்தேனோ, அதனை தற்போது மீண்டும் செய்ய விரும்புகிறேன். 

வெற்றி, தோல்வியை ஒரு இரவில் மாற்றி விட முடியாது. 16 ஆண்டுகளாக என்னுள் எந்த மாற்றமும் இல்லை. மாற்றிக் கொள்ளவும் விரும்பியதில்லை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரோஹித், அடுத்த இரண்டு மாதங்களில் எனக்குள் எந்த மாற்றமும் இருக்காது. மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்ன இலக்கை அடையப் போகிறோம் என்பது மட்டும்தான் எனது மனதில் இருக்கிறது. 16 ஆண்டிற்கு பிறகு தான், என்னுடைய கிரிக்கெட் எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் பேச வேண்டும் என்றார்.

விக்ரம் எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் !

கடைசியாக பேசிய ரோஹித், எப்போதும் என்னுடைய நம்பர்களை பற்றி கவலை கொண்டதில்லை. தற்போதைய சூழலில் அடுத்த 2 மாதங்கள் சிறந்த நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஒரே எண்ணம் எனத் தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings