நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள்.. மீட்பது எப்படி?

3 minute read
0

நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி நின்று போவது அல்லது நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடைபெறாமல் நின்று போவது. இந்த நிகழ்வுகள் முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தன. 

நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள் மீட்பது எப்படி?
இன்றைக்கு அவை அதிகரித்து விட்டன என்றே சொல்ல வேண்டும். தவிர, அந்தக் காலத்துத் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப் பட்டவை என்பதால், அவை நின்று போவதற்கும் பெரும்பாலும் அவர்களே காரணமாக இருந்தார்கள். 

அதனால், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகிற மன வலி சற்றுக் குறைவு தான்.

இன்றைக்கோ பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே என்றாலும், திருமண நாள் வருவதற்குள் சம்பந்தப் பட்டவர்கள் பேசிப்பழகி, அவர்களுக்குள் காதல்கூட மலர ஆரம்பித்து விடுகிறது. 

சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

காதலர்கள் தம் பெற்றோர்கள் சம்மதம் பெற்று திருமண நாளுக்குக் காத்திருக்கும் நேரத்தில் அது நின்று போனால்... எப்பேர்ப்பட்ட மனவலி அது.

இன்றைக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போவதற்குச் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணுமே பெரும்பாலும் காரணமாக இருக்கிறார்கள். 

அதனால், அவர்கள் எதிர்கொள்கிற விமர்சனங்களும் எக்கச்சக்கம். ஒரு பக்கம் மனதுக்குப் பிடித்து யெஸ் சொன்ன ஒரு நபரை மறுத்த வலி, இன்னொரு பக்கம் விமர்சனங்கள். 

இந்தத் தாக்கங்களிலிருந்து சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் மீண்டு வருவது எப்படி? இது போன்ற நேரத்தில், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை எப்படிக் கையாள்வது?

நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள் மீட்பது எப்படி?
மீண்டு வருவது, கையாள்வது இரண்டையும் பற்றிச் சொல்வதற்கு முன்னால், காரணங்களைச் சொல்லி விடுகிறேன். இன்றைய நவீன உலகில், கண்டவுடன் காதல் என்பது, வாட்ஸ்அப் டிபியைக் கண்டவுடன் காதல் என்று மாறி விட்டது. 

காதலைச் சொல்வது முதல் பெற்றோர்களைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்க முயல்வது வரை அனைத்துமே அசுர வேகத்தில் நடக்கின்றன. பிரச்னை ஆரம்பிப்பதே நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தான்.

நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள காலமே திருமணங்கள் நின்று போவதற்குக் காரணமாகி விடுகிறது. 

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி?

நிச்சயம் முடிந்து ஓரிரு மாதங்களில் திருமணம் என்றால் அவை பெரும்பாலும் நடந்து விடுகின்றன. கால இடைவெளி கூடும் போது தான், பிரச்னையே ஆரம்பிக்கிறது.

ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை, பிற்போக்காக மணமேடையில் தான் மணமக்கள் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. 

வாட்ஸ்அப் சாட்டிங், மனநிலையை வெளிக்காட்டும் ஸ்டேட்டஸ், வீடியோ கால், அவுட்டிங் என்று நிச்சயத்திற்குப் பின்பு பல நிகழ்வுகள் நடக்கின்றன. 

ஒருவரை யொருவர் அறிந்து கொள்கிறோம் என்ற பெயரில் பலவற்றைப் பேசித் தீர்க்கிறார்கள். இதன் நல்ல விளைவாக, அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்படுகிறது.

கெட்ட விளைவாக, இவன் என்னை டாமினேட் செய்கிறான், இவள் என்னைப் புரிந்து கொள்வதில்லை, இதைச் செய்யாதே, இப்படி டிரெஸ் பண்ணாதே எனப் பல உத்தரவுகள், தலையீடுகள் என்று மெல்ல மெல்ல பிரச்னைகள் துளிர் விட்டு, 

நீ எந்தப் பொண்ணுங்க கூட சாட் பண்றே, உன் போன் கால் லிஸ்ட்டைக் காட்டு, உனக்கு போன் போட்டேன் பிஸினு வந்துச்சு, நீ எந்தப் பையன்கூட பேசிட்டு இருந்தே என்று விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கின்றன. 

விளைவு, மணவாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே மணமுறிவு ஏற்பட்டு விடுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கமென்ட்டுகள்கூட ஒரு திருமணத்தை நிறுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள் மீட்பது எப்படி?
அந்தப் பையன் ஒரு பொண்ணு கூட சுத்தினானே, அந்தப் பொண்ணு எல்லார்கிட்டேயும் சிரிச்சு பேசும், பொண்ணு பார்க்க நல்லா யில்லையே, 

பையனுக்கு வழுக்கை ஆரம்பிக்குதே எனப் போகிற போக்கில் விளையாட்டாகவோ, வினையாகவோ கமென்ட் அடிக்க, சம்பந்தப் பட்டவர்களுக்கு மனது தடுமாற ஆரம்பிக்கும்.

எதிர் பார்ப்புகளும் திருமணங்களை நிறுத்துகின்றன. தனக்கு வருகிற மனைவி க்யூட்டாக, ஸ்லிம்மாக, டபுள் டிகிரி படித்தவளாக, நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு வேலை, ஸ்டேட்டஸ் என்று இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர் பார்க்கிறார்கள். 

உணவுக்குழாய் எதனால் பாதிக்கப்படைகிறது? தெரியுமா?

கணவன் தன்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும், தன்னை உள்ளங்கைகளில் வைத்துத் தாங்க வேண்டும், தன் விஷயங்களில் தலையிடக் கூடாது என்று பெண்கள் எதிர் பார்க்கிறார்கள். 

எதிர் பார்ப்புகளில் ஒன்றிரண்டு ஏமாற்றத்தில் முடிந்தாலும் பிரிவு என்ற முடிவை எடுத்து விடுகிறார்கள்" என்ற நம்பி, இதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும் சொன்னார்.

திருமணம் நின்றுவிட்டால் இரு வீட்டாருமே வருத்தப் படுவார்கள் என்றாலும், நிராகரிக்கப்பட்ட வீட்டில் பிரச்னை சற்று அதிகமாகவே இருக்கும். 

உன்னால வெளியே தலைகாட்ட முடியல. அவமானமா இருக்கு. சொந்தக்காரங்க நடுவுல எங்க மானம், மரியாதை யெல்லாம் போச்சு என்று தங்கள் கோபத்தை யெல்லாம் பிள்ளைகளின் மீது இறக்கி வைப்பார்கள் பெற்றோர்கள். 

நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள் மீட்பது எப்படி?
உண்மையில், இதில் பெற்றோர்களின் மான, அவமானத்தை விட சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் மனச்சோர்வை தான் முதலில் கவனிக்க வேண்டும்.

ஒரு விஷயம் தடைப்பட்டால் அதனால் எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு நன்மை உண்டு என்ற பாசிட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் நான் சொல்லும் முதல் தீர்வு. 

ஒரு வேளை, மன உளைச்சல், மனச்சோர்வு என்று பாதிப்பு பெரிதாக இருக்குமானால், மனநல மருத்துவரின் ஆலோசனையும் மிக அவசியம். 

இந்த ஆலோசனையின் மூலம் அவர்கள் மனதில் இருக்கும் பாரம் நீங்கும். அவர்கள் புதிய வாழ்க்கைக்கும் தயாராவார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 6, April 2025
Privacy and cookie settings