நடிகை பிரியா ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

2 minute read
0

நடிகர் ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். எதிர் நீச்சல், அரிமா நம்பி, ஆதித்யா வர்மா, எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடிகை பிரியா ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?
சில மலையாளம், பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். 

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். வாமனன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த எதிர்நீச்சல் படம் அவருக்கு ஜாக்பாட் படமாக அமைந்தது.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் லியோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

மார்க்கெட்டில் கண்களைக் கவரும் கேரட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ப்ரியா ஆனந்த் ரூ. 11 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம், அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings