நடிகை த்ரிஷா பல நாட்களாக மார்க்கெட் இல்லாமல் ஒரே ஒரு வெற்றி படத்துக்காக துடித்து வந்தார். ஆனால் தற்போது மீண்டும் கோலிவுட் அவரை புகழ் உச்சிக்கு தூக்கி சென்று இருக்கிறது.
காலங்களும் உருண்டிச்சு. அசின் திருமணம் செய்து கொண்டு ஒரு பொண்ணுக்கு அம்மாவே ஆகிட்டாங்க. ஆனா த்ரிஷா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால் ஒரு நேரத்தில் முன்னணி நடிகர்கள் த்ரிஷாவை தங்களுடைய படங்களில் புக் செய்யாமல் தவிர்த்து வந்தனர். இதனால் கிடைக்கும் படங்களை ஓகே செய்து அதில் நடித்து வந்தார்.
அவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் சொற்ப வருமானம் கூட வாங்காமல் திரையரங்கை விட்டு ஓடியது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தினை பெற்றார்.
அவரை தான் எல்லா நடிகர்களும் புக் செய்து வந்தனர். இதனால் த்ரிஷாவின் கேரியரே முடியும் நிலை உருவாகியது. அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்தவர் தான் மணிரத்னம்.
தன்னுடைய கனவு ப்ராஜெக்டான பொன்னியின் செல்வனில் த்ரிஷாவை குந்தவையாக நடிக்க வைத்தார். அந்த கதாபாத்திரத்தில் அம்மணி பின்னி பெடல் எடுக்க மீண்டும் தீ பற்றி கொண்டது.
தமிழ் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக எல்லா மொழிகளிலும் வாய்ப்பு குவிந்து வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் லியோ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தி ரோடு என்ற படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஜோடியாக ஐடென்டிடி, மோகன்லால் ஜோடியாக ராம் என்ற படங்களிலும் நடித்துள்ளார் த்ரிஷா. சூர்யா வங்கலா இயக்கத்தில் ப்ருந்தா வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி, தலைவர் 171, கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படங்களிலும் த்ரிஷாவை புக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments