சிரிஞ்சில் மருந்து இல்லாமல் குழந்தைக்கு தடுப்பூசி.. அதிர்ச்சி சம்பவம் !

0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி, பிறந்து, 75 நாட்களான தங்கள் மகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர்.

சிரிஞ்சில் மருந்து இல்லாமல் குழந்தைக்கு தடுப்பூசி.. அதிர்ச்சி சம்பவம் !
அங்கிருந்த நர்ஸ் ஷீபா, குழந்தைக்கு ஊசி செலுத்தி யுள்ளார். அப்போது தான், சிரிஞ்சில் மருந்தில்லாததை குழந்தையின் தாய் பார்த்து, நர்சிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கிடையில் ஊசி செலுத்தி முடிக்கப்பட்டு விட்டதால் குழந்தையின் உடலுக்குள் காற்று சென்றது. ஆனால் மருந்து நிரப்ப மறந்து விட்டதாக நர்ஸ், அலட்சியமாக கூறி விட்டு சென்று விட்டார்.

இது அங்கிருந்த நோயாளிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, மருந்து நிரப்பாமலேயே ஊசி செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. 

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

இங்கு வேலை பார்க்கும் நர்ஸ்கள் ஷீபா, லுார்து ஆகிய இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதும், அந்த டென்ஷனில் ஷீபா கவனக் குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்தை ஏற்றாமல் ஊசி செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நர்ஸ்கள் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கிடையே, குழந்தையின் உடலுக்குள் மிகக் குறைந்த அளவே காற்று சென்றதால் உடல்நல பிரச்னைகள் எதுவும் ஏற்படாது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings