இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பலியான சர்ச் பார்க்கில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் மீரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு வந்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல்.
மீரா சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பற்றிய ரகசியம் தெரியுமா? உங்களுக்கு !
துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில்
சமீபத்தில் விஜய் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் இருந்து உயிர் பிழைத்து மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவரது மகள் இறந்த சம்பவம் அவருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Thanks for Your Comments