சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெறுகிறேன்.. நடிகை விஜயலட்சுமி !

0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். 

சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெறுகிறேன்... நடிகை விஜயலட்சுமி !

இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டே நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் கொடுத்து விட்டு, பிறகு வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, புகார் கொடுத்ததில் இருந்து செய்தியாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

கோதுமைப்புல் பொடில இவ்வளவு நன்மை இருக்கா?

எதுவாக இருந்தாலும் போலீஸ் பாதுகாப்புடன் தான் வெளியில் வந்துள்ளேன். வீரலட்சுமிக்கு தெரிந்த ஒரு இடத்தில் தான் நான் கடந்த 2 வாரங்களாக வசித்து வந்தேன். 

என்ன நடந்தது என்று தெரியவில்லை அவர்கள் வேறு திசையிலும், நான் வேறு திசையிலும் பயணிப்பது போல் தோன்றுகிறது. 

அது மட்டுமல்லாது நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து நேற்று இரவு என்னை வெளியே போக சொன்னார்கள். பிறகு காவல்துறை பேசி என்னை அங்கு இருக்க வைத்தார்கள்.

சாப்பாடு கொடுக்காமல் நிறுத்தி விட்டார் வீரலட்சுமி, இந்த குறுகிய நாட்களில் நிறைய துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளேன். அதனால் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொள்கிறேன். 

என் சுயமுடிவு தான் இது. வாபஸ் வாங்கி விட்டு நான் பெங்களூரு செல்கிறேன். இதற்கு மேல் இதனை நான் மேற்கொண்டு எடுத்து செல்லும் மனநிலையில் இல்லை. 

வருங்காலத்தில் இந்த புகாரை மீண்டும் கையிலெடுக்கும் எண்ணமும் இல்லை. நான் எதிர்பார்த்து வந்தது வேறு ஆனால் இங்கு நடப்பது வேறு. 

சீமானை எதிர்கொள்ளும் அளவிற்கு எனக்கு மனதளவிலும், உடலளவிலும் பலம் இல்லை என்றே தோன்றுகிறது. சீமான் பேசுவது ரொம்பவே என்னை காயப்படுத்துகிறது. இது வேண்டாம், என்னால் முடியவில்லை. 

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

அவர் தான் சொல்கிறாரே 20 சம்மன் அனுப்பினாலும் என்னை ஒன்னும் செய்ய இயலாது என்று. நான் சொல்கிறேன, சீமான் சூப்பர் அவருக்கு தான் முழு அதிகாரமும் இருக்கிறது தமிழ்நாட்டில். 

அவர் முன்பு யாரும் எதுவும் செய்ய இயலாது, தோல்வியை நான் ஒப்பு கொண்டு விலகி கொள்கிறேன். சீமான் நல்லா இருக்கட்டும், நான் புகாரை வாபஸ் பெற்று கொள்கிறேன் என்று கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings