தயிர் பச்சடி கேட்டதால் இளைஞர் அடித்துக் கொலை !

0

பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

தயிர் பச்சடி கேட்டதால் இளைஞர் அடித்துக் கொலை !
லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.  

அப்போது அவர்களுக்கு தயிர் பச்சடி குறைவாக கொடுக்கப் பட்டதாக தெரிகிறது. எனவே லியாகத் இன்னும் கொஞ்சம் தயிர் பச்சடி வேண்டுமென கேட்டுள்ளார். 

ஆனால் ஊழியர்கள் தயிர் பச்சடி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !

இதனிடையே லியாகத்தை சில ஊழியர்கள் தனியாக ஒரு அறைக்கு இழுத்துச் சென்று அடித்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உணவகத்திற்கு வந்தனர். 

ஊழியர்களிடம் இருந்து லியாகத்தை மீட்ட போலீஸார், அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். 

ஆனால் லியாகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings