29 வயதான பைலட் மற்றும் யுடியூபரான ட்ரெவர் ஜேக்கப், அதிக பேர் தனது வீடியோவை பார்க்க வேண்டுமென செய்த செயல் தற்போது அவருக்கு சிக்கலை அளித்துள்ளது.
2021ஆம் டிசம்பர் மாதம் தனது யுடியூப் பக்கத்தில் ட்ரெவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தான் பயணம் செய்த விமானம் மலையில் மோதி விபத்திற் குள்ளானது என்று கூறியிருந்தார்.
ஆனால் இது தொடர்பான அமெரிக்க புலனாய்வு துறையின் விசாரணையின் போது, விபத்து நடந்த இடத்தை சுத்தம் செய்து விசாரணையைத் தடுக்க முயற்சி செய்த குற்றத்தை ட்ரெவர் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 2021இல், கலிஃபோர்னியாவின் சான்டா பார்பரா விமான நிலையத்தி லிருந்து கேமராக்கள் பொருத்தப்பட்ட விமானத்தில் ட்ரெவர் ஜேக்கப் தனியாகப் புறப்பட்டார்.
அவர் தன்னுடன் ஒரு பாராசூட் மற்றும் செல்ஃபி ஸ்டிக் ஒன்றையும் எடுத்துக் கொண்டு சென்றார். விமானத்தில் பறந்த ட்ரெவர், தான் செல்லவேண்டும் என்று திட்டமிட்ட இடத்திற்கு சென்று சேரவில்லை.
விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் லாஸ் பேட்ரஸ் தேசிய வனப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஜேக்கப் அந்த இடத்திற்குச் சென்று படங்களை மீட்டெடுத்தார்.
இந்த விபத்து தொடர்பாக தன்னுடைய கேமராவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை டிசம்பர் 2021இல் தன்னுடைய யுடியூப்பில் வெளியிட்டார். இப்போது வரை இந்த வீடியோவை 29 லட்சம் பேர் யுடியூப்பில் பார்த்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடமும் ட்ரெவர் ஜேக்கப் புகார் தெரிவித்தார்.
ஆனால் ட்ரெவர் பதிவிட்ட வீடியோவில், ஜேக்கப் ஏற்கனவே பாராசூட் அணிந்திருந்த தாகவும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அவர் முயற்சிக்க வில்லை என்றும், சிலர் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
ட்ரெவர் பயணித்த விமானம் விபத்துக் குள்ளானது தொடர்பாக நடந்த விசாரணை சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
விமானத்தில் பயணித்த அவர், அந்த விமானத்தை திட்டமிட்டே விபத்துக் குள்ளாக்கியதாக தெரிய வந்துள்ளது. அவருக்கு தனது இலக்கை அடையும் எண்ணம் இல்லை.
மாறாக பறக்கும் போதே விமானத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளார்.
அப்படி பாராசூட் உதவியுடன் குதித்து தப்பித்ததையும், அவரது விமானம் கீழே விழுந்து விபத்துக் குள்ளானதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார், என்று கலிபோர்னியா மத்திய மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் விமான விபத்து நடந்த இடத்தில் கிடந்த விபத்துக் குள்ளான விமானத்தின் பாகங்களை தனியாக ஒரு ஹெலிகாப்டரில் வந்து அப்புறப் படுத்தி, அந்த தடயங்களை அழித்துள்ள தாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த விபத்தின் மூலம் தனது யுடியூப் வீடியோவை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என திட்டமிட்டு இதை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் ட்ரெவர் ஜேக்கப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு அவரது விமான ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறப்பட்டது.
ட்ரெவர் ஜேக்கப் தரப்பு கருத்தை அறிய அவரது வழக்கறிஞரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் பிபிசியின் கோரிக்கைக்கு ஜேக்கப்பின் வழக்கறிஞர் பதிலளிக்க வில்லை. பிபிசி.....
Thanks for Your Comments