ஒமேகா 3 அதிகம் உள்ள மீன்கள் என்னென்ன? தெரியுமா?

0

உடலுக்கு தேவையான ஒமேகா 3 அமிலங்கள் இருக்கக் கூடிய மீன்களின் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களுள் முக்கிய ஒன்று ஒமேகா 3 சத்து ஆகும். 

ஒமேகா 3 அதிகம் உள்ள மீன்கள் என்னென்ன? தெரியுமா?
இந்த சத்துக்கள் பச்சை காய்கறிகளில் அதிகளவில் இருக்கின்றது. அதே போல அசைவ உணவாக பார்க்கப்படும் மீன்களிலும் ஒமேகா 3 சத்துக்கள் இருக்கின்றது.

கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?

காய்கறிகளை சாப்பிடப் பிடிக்காத அசைவப் பிரியர்களுக்கு ஒமேகா 3 ஊட்டச்சத்துக்கள் தேவை என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடலாம். 

அடுத்து ஒமேகா 3 சத்துக்கள் அதிகளவில் இருக்கக் கூடிய மீன் வகைகள் பற்றி பார்க்கலாம்.

ஒமேகா 3 சத்துக்கள் அதிக அளவில் இருக்கக் கூடிய மீன் வகைகள்…

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் மீன் வகைகளில் ஒன்றாக சால்மன் மீன் வகையும் இருக்கின்றது. இந்த சால்மன் மீன் வகையில் அதிக அளவு ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஏழைகள் அதிகளவில் வாங்கி சமைத்துக் சாப்பிடக் கூடிய மத்தி மீனில் ஒமேகா 3 சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது.

ஒமேகா 3 சத்துக்கள் அதிகளவில் நிறைந்திருக்கக் கூடிய மீன் வகைகளில் கானாங்கெளுத்தி மீனும் ஒன்று. கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 சத்துக்கள் மட்டுமில்லாமல் செலினியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றது.

அதே போல தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் கிடைக்கக் கூடிய நெத்திலி மீனால் ஒமேகா 3 சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இந்த நெத்திலி மீனில் புரதங்களும் அதிக அளவில் இருக்கின்றது.

ஒமேகா 3 சத்துக்கள் அதிகளவில் இருக்கக் கூடிய மீன் வகைகளில் சூறை மீனும் ஒன்றாக இருக்கின்றது. இந்த சூறை மீனில் ஒமேகா 3 சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் பி12 சத்துக்களும் அடங்கியுள்ளது.

மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு செய்முறை !

எண்ணெய் தன்மை அதிகமாகக் கொண்டுள்ளார் மீனாக ஹாலிபட் மீன் இருக்கின்றது. எண்ணெய் தன்மை அதிகளவில் இருந்தாலும் ஹாலிபட் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இருக்கின்றது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings