நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு இவ்ளோவா? தலை சுத்துதே !

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர். 

நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு இவ்ளோவா? தலை சுத்துதே !
அந்த வகையில் தற்போது எவர்கிரீன் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும மேலாக நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர், த்ரிஷா. 

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. 

தாய் சிக்கன் ஷாட்டே செய்வது எப்படி?

அதன்பின் கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். 

அதுவும் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரியை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ரசிப்பார்கள் தான். 

2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்தார் விஜய். 

தொடர்ந்து இருவரின் கெமிஸ்ட்ரியும் கில்லி படத்தில் ஹிட்டானதை அடுத்து திருப்பாச்சி, ஆதி படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வருடங்களில் இணைந்தார். பின் கோலிவுட்டின் ஹிட் ஜோடியாக இருவரும் மாறினர். 

அதற்கு அடுத்து கடைசியாக குருவி படத்தில் இணைந்தவர். பின்னர் த்ரிஷாவுடன் வேறு படத்தில் இணைந்து ஜோடியாகவே நடிக்கவில்லை. தற்போது 15 வருஷத்துக்கு பின் விஜய் த்ரிஷா ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தனர்.

15 வருஷத்துக்கு பின் இவரிகளின் கம்பேக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது. 

அதுவும் படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஆறுதல் சொல்லி லிப்கிஸ் அடிக்கும் காட்சி செம வைரலாகி வருகிறது, மேலும் இருவரையும் திரையில் பார்த்தபோது கில்லி காலம் நியாபகத்துக்கு வந்ததாக புகழ்ந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்போது அதே அழகு பொங்க ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம். 

அதன்படி பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகை த்ரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாதம் 60 லட்சம் ரூபாயும் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை நடிகை த்ரிஷா விளம்பரங்கள், சினிமா படங்கள் மூலம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?

நடிகை த்ரிஷாவுக்கு பிறந்து வளர்ந்த சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு ஒன்று உள்ளது. ஆந்திராவிலும் த்ரிஷாவுக்கு ஒரு வீடு உள்ளது. மேலும், பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். 

அது மட்டுமின்றி இவரிடம் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் உள்ளது.

இந்நிலையில் சமந்தா, நயன்தாரா அளவுக்கு நடிகை த்ரிஷா சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் அதிக பட்சமாக 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்து த்ரிஷாவின் பெயரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு இவ்ளோவா? தலை சுத்துதே !

மேலும் கூடிய விரைவில் 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனிடையே தற்போது நடிகை த்ரிஷா சதுரங்க வேட்டை 2 படத்தில் ஏற்கனவே நடித்து முடித்து விட்டார். 

இதைத் தொடர்ந்து கவுரவ் நாராயணன் இயக்கும் படம் மற்றும் தனுஷின் 50வது படத்திலும், மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளாராம். 

பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் செய்வது எப்படி?

அது மட்டுமின்றி நடிகை த்ரிஷா 'லியோ' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து தற்போது அஜித்துடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings